மும்முனை தாக்குதலில் சிக்கிய அஸ்ஸாம்… உதவிக்கரம் நீட்டுகிறார் மோடி..!!!

Assam மாநிலம், வெள்ளம், எண்ணெய் கிணற்றின் தீ, கொரோனா வைரஸ் என மும்முனை தாக்குதலில் சிக்கி தவிக்கிறது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 19, 2020, 07:04 PM IST
  • அஸ்ஸாமில், பிரம்மபுத்ரா நதியில் ஏற்பட்ட வெள்ளத்தினால், 26 மாவட்டங்கள் வெள்ளத்தில் சிக்கியுள்ளன.
  • தின்சுகியா மாவட்டத்தில் எண்ணெய் கிணறில் ஏற்பட்ட தீ இன்னும் அணைக்கப்படவில்லை
  • மாநிலத்திற்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார்
 மும்முனை தாக்குதலில் சிக்கிய அஸ்ஸாம்… உதவிக்கரம் நீட்டுகிறார் மோடி..!!! title=

அஸ்ஸாம் மாநிலம், வெள்ளம், எண்ணெய் கிணற்றின் தீ, கொரோனா வைரஸ் என மும்முனை தாக்குதலில் சிக்கி தவிக்கிறது.

Assam மாநிலம் பெரும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தினால் இதுவரை 79 பேர் இறந்து விட்டதாக கூறப்படுகிறது. பிரம்மபுத்ரா நதியின் தொடர்ந்து நீர் மட்டம் அதிகரித்து வருவதால் மொத்தம் 26 மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. 2678 கிராமங்கள் பின்னால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.

வெள்ளத்தினால், மொத்தம் 27,63, 219 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இலட்சக்கணக்கான ஹெக்டேர் நிலப்பரப்பில் உள்ள பயிர்கள் சேதமடைந்துள்ளன.

Assam அரசு 649 இடங்களில் நிவாரண முகாம்கள் அமைத்துள்ளது. காசிரங்கா வனப்பகுதியில் மொத்தம் 108 விலங்குகள் உயிரிழந்துவிட்டன என மாநில அரசு கூறியது.

சனிக்கிழமையன்று ஆண் காண்டாமிருகம் ஒன்று வெள்ளத்தில் இருந்து தப்பிக்க வனப்பகுதியில் இருந்து வெளியே வந்து பலமணிநேரம் தேசிய நெடுஞ்சாலை 37 அமர்ந்திருந்தது. நெடுநாட்கள் உண்ணாமல் மிகவும் பலவீனமாக காணப்பட்டது.

பலமணிநேரம் அமர்ந்த ஓய்வெடுத்த பின் மீண்டும் அது வனப்பகுதிக்கு சென்று விட்டதாக காசிரங்கா வனப்பகுதி அதிகாரிகள் தெரிவித்தனர். அதற்கு இயற்கை உணவு கிடைத்து நலமாக இருப்பதை காட்டும் வீடியோ ட்விட்டரில் வெளியாகியுள்ளது.

காசிரங்கா(Kaziranga) வனப்பகுதி ஆண்டுதோறும் வெள்ளத்தினால் பாதிக்கப்படுகிறது. இந்த காசிரங்காவில் ஒற்றை கொம்புடைய காண்டாமிருகங்கள் அதிக அளவில் காணப்படுகின்றன.

ALSO READ | Delhi rains: சில மணிநேர மழையால் மூழ்கிய டெல்லி, பல பகுதிகளில் நீர் தேக்கம்; ஒருவர் பலி

வெள்ள பாதிப்பு ஒரு பக்கம் உள்ள நிலையில், அஸ்ஸாமில் உள்ள தின்சுகியா மாவட்டத்தில் உள்ள எண்ணெய் கிணற்றில் கடந்த 9ம் தேதி பிடித்த தீ இன்னும் அணைக்கப்படவில்லை. அந்தத் தீயை அணைக்கும் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்படுகிறது. அடுத்த வெள்ளிக்கிழமைக்குள் தீ அணைக்கப்பட்டு விடும் என Oil India Limited (OIL)  எண்ணெய் நிறுவனம் தெரிவித்துள்ளது

எண்ணை கிணறு தீ விபத்தில் இறந்த 11 குடும்பங்களுக்கு தலா 20 லட்சம் பாய் இழப்பீடு கொடுக்கப்பட்டுள்ளதாக ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனம் தெரிவித்துள்ளது

நிலையில், வெள்ளம் எண்ணெய்க் கிணறு தீ,  கொரோனா வைரஸ் என மும்முனைத் தாக்குதலை எதிர்கொள்ளும் அஸ்ஸாமிற்கு, சாத்தியமான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளதாக, முதல் அமைச்சர் சர்பானந்த சோனாவால் ட்வீட் செய்துள்ளார்.

 

Trending News