யெடியூரப்பா தலைமையிலான BJP அரசுக்கு பெரிய சோதனை; இன்று வாக்கு எண்ணிக்கை!

கர்நாடகா சட்டப்பேரவையில் 15 தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத் தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படவுள்ளன!!

Last Updated : Dec 9, 2019, 08:22 AM IST
யெடியூரப்பா தலைமையிலான BJP அரசுக்கு பெரிய சோதனை; இன்று வாக்கு எண்ணிக்கை! title=

கர்நாடகா சட்டப்பேரவையில் 15 தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத் தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படவுள்ளன!!

பெங்களூரு: 15 சட்டமன்றத் தொகுதிகளில் கடந்த டிசம்பர் 5 ஆம் தேதி நடைபெற்ற இடைத்தேர்தலின் வாக்களிக்கப்பட்ட வாக்குகள் இன்று எண்ணப்பட்டு மாலைக்குள் முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணைய அதிகாரி தெரிவித்துள்ளார். 

எச்.டி.குமாரசாமி தலைமையிலான மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசு மீது அதிருப்தியடைந்திருந்த 14 காங்கிரஸ், 3 மஜத எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜிநாமா செய்திருந்தனர். இதனிடையே, இந்த 17 எம்எல்ஏக்களின் ராஜிநாமா கடிதங்களை நிராகரித்திருந்த அப்போதைய பேரவைத் தலைவர் கே.ஆர்.ரமேஷ்குமார், கட்சித் தாவல் சட்டத்தின்கீழ் 17 பேரின் எம்எல்ஏ பதவியையும் தகுதிநீக்கம் செய்து உத்தரவிட்டிருந்தார். இதன் விளைவாக, மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசு கவிழ்ந்தது.

இதனிடையே, தகுதிநீக்கம் செய்யப்பட்ட 17 எம்எல்ஏக்களும் பேரவைத் தலைவர் பிறப்பித்துள்ள ஆணையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், தகுதிநீக்கப்பட்டது செல்லும்; ஆனால் தகுதி நீக்கப்பட்ட எம்எல்ஏக்கள் இடைத்தேர்தலில் போட்டியிடத் தடையில்லை என்று தீர்ப்பு வழங்கியது.

இந்நிலையில், தகுதிநீக்கம் செய்யப்பட்ட 17 எம்எல்ஏக்களின் 17 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மஸ்கி, ராஜராஜேஸ்வரி நகர் நீங்கலாக அத்தானி, காக்வாட், கோகாக், எல்லாபுரா, ஹிரேகேரூர், ரானிபென்னூர், விஜயநகரா, சிக்பளாப்பூர், கே.ஆர்.புரம், யஷ்வந்த்பூர், மகாலட்சுமி லேஅவுட், சிவாஜிநகர், ஹொசபேட், கே.ஆர்.பேட், ஹுன்சூர் ஆகிய 15 தொகுதிகளுக்கு டிசம்பர் 5 ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இத்தொகுதிகளில் பாஜக, காங்கிரஸ், மஜத கட்சிகளின் வேட்பாளர்கள் உள்பட 165 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 15 தொகுதிகளில் ஆளும் பாஜகவும் எதிர்க்கட்சியான காங்கிரசும் நேருக்கு நேர் மோதுகின்றன.

டிசம்பர் 5 ஆம் தேதி காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்ற வாக்குப் பதிவில் 15 தொகுதிகளிலும் மொத்தமுள்ள 37,77,984 வாக்காளர்களில் 25,65,469 வாக்காளர்கள் வாக்களித்தனர். 15 தொகுதிகளில் பதிவான வாக்குகள் மாநிலத்தின் 11 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையங்களில் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்படுகின்றன. வாக்கு எண்ணிக்கை முடிவுகள் நண்பகல் 12 மணிக்குள் வெளியாகுமென்று எதிர்பார்க்கப்படுகின்றன. ஆதலால் இந்த தேர்தல் முடிவு, எடியூரப்பா அரசுக்கு முக்கியமானதாக கருதப்படுகிறது. இதுகுறித்து பேட்டியளித்த எடியூரப்பா, குறைந்தது 13 தொகுதிகளில் பாஜக வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார். 

 

Trending News