Cyclone Biporjoy Updates: பைபர்ஜாய் சூறாவளியின் தாக்கம் குஜராத்-மும்பையில் தொடங்கியது, பலத்த காற்றுடன் உயரமான அலைகள் எழுகின்றன, பல இடங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், புயலின் பாதிப்பு குறித்த வீடியோக்கள் வைரலாகின்றன.
பிபார்ஜாய், பைபர்ஜாய் என்றும் அழைக்கப்படும் பிபோர்ஜாய் சூறாவளியின் தாக்கம் சவுராஷ்டிரா, கட்ச் ஆகிய பகுதிகளில் ஜூன் 13, 14 மற்றும் 15 வரை இருக்கும். இது ஜூன் 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் வடக்கு குஜராத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று வானிலை முன்னறிவிப்பு வெளியிடப்பட்டிருந்த நிலையில், சூறாவளி புயல் இன்று குஜராத் கடற்கரையை அடையும்.
மும்பை, கேரளாவிலும் கடல் கரையோரங்களில் அதிக அலைகள் எழுகின்றன. பலத்த காற்றும் வீசி வருகிறது. பைபோர்ஜாய் புயல் இன்று மாலை குஜராத் கடற்கரையை தாக்கும். துவாரகா கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசி வருகிறது. சூறாவளி காரணமாக துவாரகாவில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
#WATCH | Strong winds in the coastal town of Dwarka as 'Biparjoy' approaches Gujarat coast to make landfall today evening
Dwarka is expected to see extremely heavy rainfall today due to the cyclone#Gujarat pic.twitter.com/50LOt0S404
— ANI (@ANI) June 15, 2023
அதே நேரத்தில், மும்பையில் 'பைபர்ஜாய்' புயலின் தாக்கத்தினால், கடலில் இன்று அலைகள் அதிகமாக எழுகின்றன. ”பிபர்ஜோய் புயல் சவுராஷ்டிரா, கட்ச் நோக்கி நகர்கிறது. இது ஜகாவ்விலிருந்து சுமார் 180 கி.மீ தொலைவில் உள்ளது. இதன் காற்றின் வேகம் மணிக்கு 125-135 கிமீ வேகத்தில் வீசுகிறது. மாலைக்குள் கரையை வந்தடையும். இது மிகவும் கடுமையான சூறாவளி புயல் ஆகும்.இது மரங்கள், சிறிய வீடுகள், மண் வீடுகள், தகர வீடுகள் ஆகியவற்றை சேதப்படுத்தும்” என்று ஐஎம்டி இயக்குநர் ஜெனரல் மிருத்யுஞ்சய் மொஹபத்ரா தெரிவித்தார்.
பிபார்ஜாய் புயல் தற்போது, குஜராத் கடற்கரையிலிருந்து 200 கிமீ தொலைவில் உள்ளது. வியாழன் மாலை வரை குஜராத் கடற்கரையை சூறாவளி தாக்கும் சாத்தியக்கூறுகள் என்பதும், அதனால் இப்பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் என்பதால், 74,000 க்கும் மேற்பட்ட மக்கள் தாழ்வான பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
மேலும் படிக்க | லுங்கிகள் - நைட்டிகளுக்கு தடை... குடியிருப்பாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த RWA!
கட்ச் மாவட்டத்தில் உள்ள கடற்கரையில் இருந்து பூஜ்ஜியம் முதல் 10 கிலோமீட்டர் வரை உள்ள சுமார் 120 கிராமங்களில் வசிக்கும் மக்களை, மாவட்ட நிர்வாகம் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றியுள்ளது. “கடலோர கிராமங்களில் இருந்து சுமார் 40,000 பேரை பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றியுள்ளோம்” என்று குஜராத் சுகாதார அமைச்சர் ஹிரிஷிகேஷ் படேல் தெரிவித்துள்ளார்.
Biparjoy புயல், 'மிகவும் தீவிரமான சூறாவளி புயல் (VSCS)' ஆக மாறி, Jakhou துறைமுகம் அருகே கரையை கடக்கும் என்றும், அதிகபட்சமாக 150 கிமீ வேகத்தில் காற்று வீசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சக்திவாய்ந்த புயல் குஜராத் கடற்கரையை நெருங்கும் போது, கட்ச், தேவபூமி துவாரகா மற்றும் ஜாம்நகர் மாவட்டங்களில் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் மழையின் தீவிரம் அதிகரிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வுத் துறையின் (IMD) தெரிவித்துள்ளது.
"14 ஜூன் 2023 அன்று 02:30 IST மணிக்கு வடகிழக்கு அரேபிய கடல் மீது VSCS பைபார்ஜோய் 200 கிமீ மேற்கு-தென்மேற்கில் ஜக்கௌ துறைமுகத்தில் இருந்தது. ஜூன் 15 மாலைக்குள் அது சௌராஷ்டிரா மற்றும் கட்ச் அருகே சௌராஷ்டிரா மற்றும் மாண்ட்வி மற்றும் கராச்சி இடையே பாகிஸ்தானை ஒட்டியுள்ள பகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்தும் என சூறாவளி குறித்த அதன் புதுப்பிப்பில் இந்திய வானிலை மையம் IMD தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க | உஷார்! இன்று ஆட்டம் காட்டப் போகும் பைபர்ஜாய் புயல், இந்த இடங்களுக்கு கனமழை அலர்ட்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ