பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, தனக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானதாக ட்விட்டரில் அறிவித்துள்ளார். இதையடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
மேலும் தன்னுடன் கடந்த சில நாட்களாக தொடர்பில் இருந்தவர்களையும், பரிசோதித்து கொண்டு தனிமைபடுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
அவர் தனது ட்விட்டர் கணக்கில் “கடந்த சில தினங்களாக கொரோனாவுக்கான (Corona)லேசாக அறிகுறிகள் இருந்ததால், கொரோனா பரிசோதனை செய்தேன். அதில் எனக்கு கொரோனா உறுதியானது. நான் தற்போது நலமாக இருக்கிறேன். மருத்துவர்களின் அறிவுரைப்படி என்னை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டேன். அவர்களது வழிகாட்டுதல்களை பின்பற்றி வருகிறேன். கடந்த சில தினங்களாக என்னுடன் நேரடி தொடர்பில் இருந்தவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள். கொரோனா பரிசோதனையும் மேற்கொள்ளுங்கள்” என தெரிவித்துள்ளார்.
இதை அடுத்து, பாஜக (BJP) உள்ளிட்ட பல தலைவர்கள் அவர் விரைவில் குணமடைய வேண்டுகிறேன் என ட்வீட் செய்துள்ளனர்.
மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, ஜோதிராதித்ய சிந்தியா, மகாராஷ்டிரா முன்னாள் முதலவர் தேவேந்திர ஃப்டனவிஸ் ஆகியோர் இதில் அடங்குவர்.
பாஜக தேசிய தலைவரான ஜே.பி நட்டா (JP Nadda) அவர்கள், மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள டயமன்ட் ஹார்பருக்கு ஒரு பேரணியில் கலந்து கொள்வதற்காக, கடந்த சில தினங்களுக்கு முன்னர் சென்றிருந்தார். அப்போது அவர் மீது திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
ALSO READ | அட.. நாங்க ஸ்கூல் போக ரெடி என்கின்றனர் இந்த மாநில பள்ளி மாணவர்கள்..!!!
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR