மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத் நகராட்சி கூட்டத்தில் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி உறுப்பினர்களை, பாஜகவினர் அடித்து உதைத்த காட்சி வெளியீடு...!
மறைந்த முன்னாள் பிரதமர் மற்றும் பாரத்திய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் அட்டல் பிஹாரி வாஜ்பாயி அவர்கள் ஆகஸ்ட்., 17 ஆம் நாள் உடல்நல குறைவால் டெல்லி AIIMS மருத்துவமனையில் காலமானார்.
வாஜ்பாயி அவர்களின் மறைவினை அடுத்து நாடு முழுவதும் 7 நாள் துக்கம் அனுசரிக்கபட்டுள்ளது. மறைந்த பாரத ரத்னா அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களுக்கு தலைவர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில், அவுரங்கபாத் நகராட்சி கூட்டத்தில், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்திந்திய மஜ்லீஸ் இ லெட்டிகத் உல் முஸ்லீமீன் கட்சிஉறுப்பினர்கள் முழக்கங்களை எழுப்பினர்.
#WATCH: Scuffle breaks out between members of BJP & AIMIM in Maharashtra's Aurangabad Municipal Corporation after an AIMIM corporator opposed the condolence proposal of former PM #AtalBihariVajpayee. (17.08.18) pic.twitter.com/IUNErxQhRA
— ANI (@ANI) August 17, 2018
இதனால், ஆத்திரமடைந்த பாஜக உறுப்பினர்கள், இரங்கல் தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த உறுப்பினர்கள் மீது சரமாரியாக தாக்கினர். இந்த சம்பவம் அங்கு பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோகாட்சிய ANI நிறுவனம் தங்களின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.