Islamization: ஜார்க்கண்டில் 1800 பள்ளிகளுக்கு ஞாயிற்றுக்கிழமைக்குப் பதிலாக வெள்ளிக்கிழமை விடுமுறை அளிக்கப்படுவதாக பாரதிய ஜனதா கட்சி எம்பி நிஷிகாந்த் துபே வெள்ளிக்கிழமை மக்களவையில் தெரிவித்தார். மேலும், நாடு "இஸ்லாமிய மயமாக்கல்" நோக்கி நகர்கிறது என்பதற்கு இந்த சம்பவம் சான்றாகும் என்றார். நாடாளுமன்ற சபையில் பூஜ்ஜிய நேரத்தின் போது இந்த விவகாரத்தை எழுப்பிய அவர், இந்த விவகாரத்தை தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) விசாரிக்க வேண்டும். இதன்மூலம் உண்மை அறிய முடியும் என்று கூறினார்.
பங்களாதேஷ் காரணமாக இருக்கலாம்:
பிஜேபி எம்பி நிஷிகாந்த் துபே கூறுகையில், "ஜார்கண்ட் மாநிலத்தில் நடக்கும் 'இஸ்லாமிய மயமாக்கல்' குறித்து நான் கவனத்தை ஈர்க்கிறேன். மாநிலத்தின் சில மாவட்டங்களில் மக்கள் தொகை சமநிலை மாறியுள்ளது. பங்களாதேஷ் அருகில் உள்ளதால் , அதன் காரணமாக இஸ்லாமிய மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
மேலும் படிக்க: 'பொருளாதார சீரழிவு': இலவச அரசியலை கட்டுப்படுத்த விரும்பும் உச்ச நீதிமன்றம்
உருது எழுத்துகளில் பள்ளிகளின் பெயர்கள்:
சபையில் தொடர்ந்து அவர் பேசுகையில், "திடீரென்று ஜார்க்கண்டில் 1800 பள்ளிகளின் தங்கள் பெயர்கள் உருது எழுத்துகளில் வைத்திருப்பது தெரியவந்தது. இந்த பள்ளிகளில் ஞாயிற்றுக்கிழமை அன்று விடுமுறை இல்லை. ஆனால் அதற்கு பதிலாக வெள்ளிக்கிழமை விடுமுறை அளிக்கப்படுகிறது" என்று பாஜக எம்.பி கூறினார். நாடு இஸ்லாமிய மயமாக்கலை நோக்கி நகர்கிறது. ஜார்கண்ட் மாநிலம் அவர்களுக்கு வழிவிடுகிறது. அதை என்ஐஏ விசாரிக்க வேண்டும். அந்த பள்ளிகளுக்கு வலுவான செய்தியை அனுப்ப வேண்டும். இதை எந்த நிலையிலும் பொறுத்துக்கொள்ள முடியாது என்றார்.
ஜார்க்கண்ட் மாநிலம் பின்தங்கி உள்ளது:
பாஜக எம்பி ஜெயந்த் சின்ஹா, ஜார்கண்ட் மாநிலத்தின் பின்தங்கிய நிலை குறித்து கேள்வி எழுப்பி, மாநிலம் வளர்ச்சியின் பல நிலைகளில் மிகவும் பின்தங்கியிருப்பதாகக் கூறினார். அவர் கூறுகையில், "மாநில அரசு தனது மக்களுக்கு ஆராய்ச்சி, வாய்ப்புகள் மற்றும் திறன் மேம்பாட்டை வழங்கத் தவறிவிட்டது. ஜார்க்கண்டில் ஏழு-எட்டு புதிய ஸ்டார்ட் அப்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன. மாநில அரசின் செயல்பாடுகளை மேம்படுத்த மத்திய அரசு உத்தரவிட வேண்டும்.
மேலும் படிக்க: ப்ரொஃபைல் பிக்சராக தேசிய கொடியை வையுங்கள் - பிரதமரின் வேண்டுகோள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ