கிரிக்கெட் சூதாட்ட விவகாரத்தில் இந்தியா கொண்டு வரப்பட்டார் சஞ்சீவ் சாவ்லா!

அசாருதீன் உள்ளிட்டோருக்கு எதிரான கிரிக்கெட் சூதாட்ட விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்ட சூதாட்டதரகர் சஞ்சீவ் சாவ்லா, லண்டனில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தி கொண்டு வரப்பட்டார்!!

Updated: Feb 13, 2020, 06:12 PM IST
கிரிக்கெட் சூதாட்ட விவகாரத்தில் இந்தியா கொண்டு வரப்பட்டார் சஞ்சீவ் சாவ்லா!

அசாருதீன் உள்ளிட்டோருக்கு எதிரான கிரிக்கெட் சூதாட்ட விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்ட சூதாட்டதரகர் சஞ்சீவ் சாவ்லா, லண்டனில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தி கொண்டு வரப்பட்டார்!!

டெல்லி: இந்திய கிரிக்கெட் வீரர் அசாருதீன் உள்ளிட்டோருக்கு எதிரான கிரிக்கெட் சூதாட்ட விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்ட சூதாட்டதரகர் சஞ்சீவ் சாவ்லா, லண்டனில் இருந்து இந்தியாவுக்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டுவரப்பட்டார். கடந்த 2000 ஆம் ஆண்டில் எழுந்த கிரிக்கெட் சூதாட்ட விவகாரத்தில் சிக்கிய   சஞ்சீவ் சாவ்லா, லண்டன் தப்பிச் சென்றார். அவரை நாடு கடத்தும்படி, பிரிட்டன் அரசுக்கு 2016 ஆம் ஆண்டில் இந்திய அரசு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில், சஞ்சீவ் சாவ்லாவை இந்தியாவுக்கு நாடு கடத்துவது தொடர்பான உத்தரவில் பிரிட்டன் உள்துறை அமைச்சர் ஜாவீத் கையெழுத்திட்டுள்ளார்.

இது குறித்து அவரது அலுவலக செய்தித் தொடர்பாளர் கூறுகையில்...  'இந்தியாவில் நடைபெற்ற சர்வதேச கிரிக்கெட் போட்டியில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக சஞ்சீவ் சாவ்லா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துவது தொடர்பான அனைத்து விவகாரங்களையும் முழுவதும் பரிசீலித்து, அதுதொடர்பான உத்தரவில் கையெழுதிடப்பட்டது.

கடந்த 2000 ஆம் ஆண்டு எழுந்த கிரிக்கெட் சூதாட்ட விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்ட  சஞ்சீவ் சாவ்லா, லண்டன் தப்பிச் சென்றார். அவரை நாடு கடத்தும்படி, பிரிட்டன் அரசுக்கு 2016 ஆம் ஆண்டில் இந்திய அரசு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கை கடந்த மாதம் 23 ஆம் தேதி விசாரித்த பிரிட்டன் நீதிமன்றம், சாவ்லாவை 28 நாள்களுக்குள் இந்தியாவுக்கு நாடு கடத்த உத்தரவிட்டிருந்தது. அதனடிப்படையில், பிரிட்டனால் அவர் நாடு கடத்தப்பட்டார். அவரை லண்டனில் இருந்து டெல்லிக்கு பலத்த பாதுகாப்புடன் போலீஸார் இன்று காலை அழைத்து வந்தனர்.