அகிலேஷ் யாதவ்க்குப் பிறகு, பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரான மாயாவதி காங்கிரஸ் மீது அதிருப்தியு தெரிவித்துள்ளார். எந்த மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சியுடன் பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணி வைக்காது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இதுக்குறித்து அவர் கூறியாதவது, சமாஜ்வாதி கட்சி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி இணைந்து கூட்டணி அமைக்க முக்கியக் காரணம் வரும் மக்களவை தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக தான் என்று அவர் கூறினார். மேலும் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் எந்தவித ஒப்பந்தமும் இல்லை. சில மாநிலங்களில் பகுஜன் சமாஜ் கட்சி காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிக்கும் என்று செய்திகள் வருகிறது. அது முற்றிலும் தவறு.
தேர்தல் நன்மைகளுக்கு நாங்கள் அப்படி செய்ய மாட்டோம். பி.எஸ்.பி எந்தவொரு மாநிலத்திலும் காங்கிரசுடன் இணையாது என்பதை மீண்டும் ஒரு முறை தெளிவுபடுத்துகிறேன் என்றார். பகுஜன் சமாஜ் கட்சியினரை பலப்படுத்தி வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் மாயாவதி தெரிவித்தார்.
2019 லோக்சபா தேர்தலில், உத்தர பிரதேச மாநிலத்தில் சமாஜ்வாதி கட்சி (SP ) மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி (BSP) கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. SP-BSP கூட்டணியில் இடம் பெற்றுள்ள ஆர்.எல்.டிக்கு மூன்று இடங்களை வழங்கியுள்ளது. மேலும் இந்த கூட்டணி பரேலி மற்றும் அமேதி ஆகிய இரு தொகுதிகளில் தங்கள் வேட்பாளர்களை நிறுத்த போவதில்லை என்றும் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.