Budget 2023 Expectations: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்னும் சில நாட்களில் பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார். மத்திய அரசின் இந்த பட்ஜெட்டுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இந்த முறை அரசாங்கம் வரி முதல் விவசாய இரசாயனங்கள் வரை பல துறைகளுக்கு பெரிய அறிவிப்புகளை வெளியிடக்கூடும் என சந்தை வல்லுநர்களின் கருத்து தெரிவித்துள்ளார்கள். இதனுடன், இதுவரை வீடுகள் கிடைக்காதவர்களுக்கு வீடுகள் வழங்குவதற்கான சிறப்புத் திட்டமும் அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பட்ஜெட்டில் அரசாங்கம் என்னென்ன சிறப்பு அறிவிப்புகளை வெளியிடக்கூடும் என நிபுணர்கள் கருதுகிறார்கள்? அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
வளர்ச்சியில் கவனம் இருக்கும்
பொருளாதார ஆராய்ச்சி ஆய்வாளர் கௌரவ் சர்மா, 'வளர்ச்சியில் கவனம் செலுத்தி, பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் திட்டங்கள் உருவாக்கப்படலாம். இதனுடன், நுகர்வோர் அதிகபட்ச எண்ணிக்கையில் பொருளாதார முன்னேற்றத்தில் பங்கேற்பதற்கான வழிகளில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும். அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையானது நுகர்வோரிடம் அதிக ரொக்க தொகையை இருக்கச்செய்யும். இதன் மூலம் மக்கள் தங்கள் முதலீடுகளையும் அதிகரிகக் முடியும்' என கூறியுள்ளார்.
வரி அடுக்கில் (டேக்ஸ் ஸ்லேப்) எதிர்பார்க்கப்படும் மாற்றம்
அதிக வரி செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு நிவாரணம் கிடைக்கும் என வரி செலுத்துவோர் நம்புகின்றனர். அதிக வருமானம் ஈட்டுபவர்களுக்கு வரி அடுக்குகளை மாற்றுவதன் நிவாரணம் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனுடன், இணைக்கப்பட்ட ஊக்கத் திட்டங்களின் உற்பத்தியை அரசாங்கம் ஏற்கனவே அறிவித்துள்ளது. இதன் மூலம் செமி கண்டக்டர் போன்ற தொழில்களில் ஈடுபடும் மக்களுக்கு பயன் கிடைக்கும்.
மேலும் படிக்க | Railway Budget 2023: ரயில் பயணிகளின் எதிர்பார்ப்புகள் நிறைவேறுமா?
பல துறைகளுக்கு நிவாரணம் கிடைக்கும்
அனைவருக்கும் வீடுகள் வழங்குவதில் அரசு கவனம் செலுத்தி வருகிறது. அரசின் தற்போதைய திட்டங்களைத் தவிர, இந்த பட்ஜெட்டில் பல புதிய திட்டங்களுக்கான அறிவிப்புகளும் வெளியாகலாம் இதனுடன், குழாய், கேபிள் போன்ற பல துறைகளில் தொழில்கள் வேகம் பெறக்கூடும்.
வேளாண் வேதியியல் (அக்ரோகெமிகல்) துறையில் நல்ல மீட்சி காணப்படுகிறது
வேளாண் வேதியியல் துறையிலும் மீட்சி காணப்படுகிறது. இந்தத் துறைக்கும் பல சாதகமான செய்திகள் அல்லது அறிவிப்புகள் வெளிவரலாம் என்று நிபுணர்கள் எதிர்பார்க்கிறார்கள். கிராமப்புற தேவை மற்றும் வேளாண் வேதியியல் துறைகளும் முன்னேற்றம் காணத் தொடங்கியுள்ளன.
நிதி அமைச்சகத்தின் பெரிய திட்டம்
யூனியன் பட்ஜெட் 2023 இல், மெட்ரோ அல்லாத நகரங்களில் வசிக்கும் மக்களுக்கு எச்ஆர்ஏ விலக்கு வரம்பு 50 சதவீதமாக அதிகரிக்கப்படக்கூடும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது தவிர, சம்பளம் பெறாத நபர்களுக்கு ( நான்-சேலரீட் கிளாஸ்) எச்ஆர்ஏ விலக்கு வரம்பை 60,000 ரூபாயிலிருந்து அதிகரிக்கலாம். எச்.ஆர்.ஏ-வில் விலக்கு அளிப்பது தொடர்பாக நிதி அமைச்சகத்தால் பெரிய திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது.
மேலும் படிக்க | Income Tax சூப்பர் செய்தி: ரூ. 87,500 மாத சம்பளத்துக்கும் வரி செலுத்த வேண்டாம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ