கொல்கத்தாவில் ரத யாத்திரை நடத்த பாஜக-விற்கு கொல்கத்தா உயர்நீதி மன்றம் அனுமதி அளித்துள்ளது!
மேற்கு வங்க மாநிலத்தில் மூன்று ரத யாத்திரை நடத்துவதற்கு பாஜக சார்பில் அனுமதி கோரப்பட்டிருந்தது. உளவுத்துறை அறிக்கையின் படி ரத யாத்திரை நடைபெற்றால், மதக்கலவரம் ஏற்படும், ரதயாத்திரையில் கலந்து கொள்ளும் அமைப்புகள் மதக்கலவரங்களை தூண்டிவிட வாய்ப்புள்ளது என கூறி பாஜக-வின் கோரிக்கையினை மம்தா பானர்ஜி தலைமையிலான மாநில மறுத்து விட்டது.
Calcutta High Court gives permission for the three yatras of BJP in West Bengal, directs that the administration should ensure that there is no breach of law and order. pic.twitter.com/e7SGSk8uRH
— ANI (@ANI) December 20, 2018
மாறாக, அந்தந்த ஊர்களில் பொதுக்கூட்டம் நடத்திக் கொள்ளலாம். அதுதொடர்பாக அரசுக்கு புதிய விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டும் என்றும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மாநில அரசின் இந்த உத்தரவை எதிர்த்து பாஜக சார்பில் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவில், பிரிட்டிஷ் அரசாங்கம் நடந்த போதே மகாத்மா காந்திக்கு தண்டி உப்பு சத்தியாகிரக யாத்திரைக்கு அனுமதி வழங்கப்பட்டது. முன்னதாக முடிவெடுத்து விட்டு, எந்த காரணங்களும் இல்லாமல் மேற்குவங்க அரசு ரத யாத்திரைக்கு அனுமதி மறுக்கிறது. இது அரசியல் சாசன சட்டப்படி தவறானது என குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்த மனுவின் மீதான விசாரணை இன்று நடைப்பெற்றது, காவல்துறையில் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “பாஜகவின் மூன்று ரதயாத்திரைகளுக்கும் சேர்த்து அதிக எண்ணிக்கையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டியிருக்கும். காவல்துறையில் அந்த அளவுக்கு ஆட்களும், பிற வசதிகளும் இல்லை,” என குறிப்பிட்டார். சில மாவட்டங்களில் பொதுக்கூட்டங்களுக்கு வேண்டுமானால் அனுமதிக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
வழக்கினை விசாரித்த நீதிபதிகள்., பாதுகாப்பு முயற்சி எடுக்காமல், பாதுகாப்பு கொடுக்க முடியாது என கூறுவது தவறானாது. எனவே பாஜக-வின் ரத யாத்திரைக்கு அனுமதி அளிக்கப்படுகிறது என தெரிவித்தனர். மேலும் யாத்திரையின் போது கலவரங்கள் ஏதும் ஏற்படாத வகையில் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் உத்தரவு பிரப்பித்துள்ளது.