சீனாவை தடுத்து நிறுத்தும் ஒரு சுவராக இந்தியா இருக்க வேண்டும்: விபின் ராவத்

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை அமெரிக்கா மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதுகிறது. இதேபோல், ஜப்பான், ஆஸ்திரேலியா, பிரான்ஸ், பிரிட்டன், இந்தோனேசியா மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளும் இதை மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பகுதியாக கருதுகின்றன என இந்தியாவின் முப்படைத் தளபதி பிபின் ராவத் கூறினார்

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 11, 2020, 05:57 PM IST
  • இந்தியா, சீனாவை தடுத்து நிறுத்த ஒரு உறுதியான சுவராக இருந்து, உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய முப்படைகளின் தளபதி கூறினார்.

    இந்தியா தனது நிலத்தையும் எல்லையையும் பாதுகாக்க பல விதமாக உத்திகளையும் வழிமுறைகளை வகுக்க வேண்டும்
  • சீனாவின் ஆதிக்க செலுத்த இந்திய பசிபிக் பிராந்தியத்தை நோக்கி முழு உலகின் கவனத்தையும் ஈர்த்துள்ளன என்று அவர் கூறினார்.
சீனாவை தடுத்து நிறுத்தும் ஒரு சுவராக இந்தியா இருக்க வேண்டும்: விபின் ராவத் title=

புது தில்லி: உலக அமைதிக்கு சீனா பெரும் அச்சுறுத்தலாக வளர்ந்து வருகிறது. அதன் தீய நோக்கங்களை உணர்ந்து, சக்திவாய்ந்த நாடுகள் அணிதிரண்டுள்ளன. இதன் விளைவாக, தற்போது 120 க்கும் மேற்பட்ட போர்க்கப்பல்கள் இந்தியப் பெருங்கடல் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளன என இந்திய முப்படைகளின்  தளபதி (சி.டி.எஸ்) ஜெனரல் பிபின் ராவத் கூறியுள்ளார்.

இந்நிலையில், இந்தியா, சீனாவை தடுத்து நிறுத்த  ஒரு உறுதியான சுவராக இருந்து, உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய முப்படைகளின் தளபதி கூறினார்.

இன்று இந்தியா அதிகரித்து வரும் பாதுகாப்பு சவால்களை எதிர்கொண்டு வருவதாகவும், அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு சிறந்த உத்தரவாதம் அளிக்கும் வகையில் செயல்பட்டு வருவதாகவும் ஜெனரல் ராவத் கூறினார். கடந்த ஏழு மாதங்களாக லடாக்கில் (Ladakh) எல்லை பகுதியில் சீனாவுடன் நடந்து வரும் மோதல் குறித்து வெளிப்படையாக ராவத் குறிப்பிடவில்லை என்றாலும், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தைப் பற்றிய குறிப்பிடும் போது, மறைமுகமாக குறிப்பிட்டார்

ஜெனரல் ராவத் (Bipin Rawat) உலகளாவிய பாதுகாப்பு உச்சி மாநாட்டில் தனது உரையின் இதனை குறிப்பிட்டார். சீனாவின் ஆதிக்க மணப்பான்மை உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. தற்போது இந்திய பசிபிக் பிராந்தியத்திற்கு 120க்கும் மேற்பட்ட போர்க்கப்பல்கள் அனுப்பப்பட்டுள்ளன என்றார். 

இந்தியா போன்ற நாடுகளுக்கு அதன் நில பகுதிகளையும் எல்லை பகுதிகளையும் பாதுகாப்பது மிகவும் முக்கியம் என்றும், இதற்கு தொழில்நுட்பங்களையும், பலவிதமான உத்திகளையும் கடைபிடிக்க வேண்டும் என்றார். 

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை அமெரிக்கா மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதுகிறது. இதேபோல், ஜப்பான்(Japan), ஆஸ்திரேலியா, பிரான்ஸ், பிரிட்டன், இந்தோனேசியா மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளும் இதை மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பகுதியாக கருதுகின்றன என இந்தியாவின் முப்படைத் தளபதி பிபின் ராவத் கூறினார்.  இது போன்ற ஒத்த எண்ணம் கொண்ட நாடுகளுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்றார். 

ALSO READ | வேளாண் சட்டத்தில் திருத்தம் செய்ய அரசு தயார்: வேளாண் அமைச்சர்

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News