கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ளது..!
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 47,54,356-ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 78,586-ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் கொரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை 37,02,595-ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 94.371 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 1,114 பேர் உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்தியாவில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை அதிவேகமாக உயர்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், “கடந்த மே மாதம் 50,000 ஆக இருந்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை செப்டம்பர் மாதத்தில் 36 லட்சமாக அதிகரித்துள்ளது.
ALSO READ | இனி ரேஷன் முதல் திருமண சான்றிதழ் வரை அனைத்தும் வீட்டிலிருந்தே பெறலாம்!!
தினந்தோறும் அதிகபட்சமாக 70,000 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைகின்றனர். தற்போது சிகிச்சை பெற்று வருபவர்களை விட குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3.8 மடங்கு அதிகமாக உள்ளது. தினந்தோறும் செய்யப்படும் அதிக எண்ணிக்கையிலான பரிசோதனைகள், பாதுகாப்பு நடவடிக்கைகள், தொற்று கண்டறிதல் மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை கண்காணித்தல் உள்ளிட்ட செயல்பாடுகள் காரணமாக இந்தியாவில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது” என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்:
* போதிய அளவு சுடு தண்ணீர் பருக வேண்டும், நடைபயிற்சி, யோகா, சுவாசப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
* நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஆயுர்வேத மருந்துகளை எடுத்துக்கொள்ளலாம் .
* மஞ்சள், சீரகம், கொத்தமல்லி, பூண்டு போன்றவற்றை உணவில் சேர்க்க பரிந்துரை செய்ய வேண்டும்.
* யோகாசனம், பிராணயாமா உள்ளிட்ட பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
* சோர்வு, உடல் வலி, இருமல், தொண்டை வலி, சுவாசிப்பதில் சிரமம் உள்ளவர்கள் இந்த வழிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்த வேண்டும்.