மத்திய அரசின் பெட்ரோல் விலை குறைப்பு; வெறும் கண்துடைப்பு -காங்கிரஸ்!

4 மாநில தேர்தலை எதிர்கொள்ளவே மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையினை குறைக்க முன்வந்துள்ளது என காங்கிரஸ் சாடியுள்ளது!

ZEE Bureau ZH Web (தமிழ்) | Updated: Oct 5, 2018, 08:36 AM IST
மத்திய அரசின் பெட்ரோல் விலை குறைப்பு; வெறும் கண்துடைப்பு -காங்கிரஸ்!
Pic Courtesy: twitter/@INCIndia

4 மாநில தேர்தலை எதிர்கொள்ளவே மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையினை குறைக்க முன்வந்துள்ளது என காங்கிரஸ் சாடியுள்ளது!

கடந்த ஆகஸ்ட் மாத்ததில் இருந்து பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து நாளுக்கு நாள் விலை உயர்ந்து வருகிறது. அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்புக் குறைவு, சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசு காரணம் தெரிவித்து வருகிறது.

தினசரி உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலையால் சாமானிய மக்கள், நடுத்தர மக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். இதனை கவனிக்காமல் வரும் பொதுத்தேர்தலுக்காக பிராச்சாரம் மோற்கொள்ளுவதில் மத்திய அரசு ஆர்வம் காட்டி வருகிறது. பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்காமல் மத்திய அரசு காலம் தாழ்த்திவரும் நிலையில் பாஜக தலைவர்கள் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று தொடர்ந்து உயர்வு கண்டு வரும் பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்தும் விதமாக உயர்ந்து வரும் எரிவாயு எண்ணைய் விலையில் ரூ.2.50 வரை குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது என மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்தார்.

மத்திய அரசின் இந்த முடிவை விமர்சித்துள்ள காங்கிரஸ் கட்சி, 2014-ஆம் ஆண்டின் நிலைக்கு பெட்ரோல் விலையை கொண்டு செல்ல முடியுமா என சவால் விடுத்துள்ளது. இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சி செய்திதொடர்பாளர் ரந்தீப் சிங் சுரஜ்வாலா தெரிவிக்கையில்... "4 மாநிலங்களில் தேர்தல் வருவதால் பொதுமக்களின் கோபத்தை கட்டுப்படுத்த பெட்ரோல் விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது. ஒரு ரூபாய் ரெண்டு ரூபாய் என குறைப்பதை விட, 2014-ஆம் ஆண்டின் பெட்ரோல், டீசல் விலை அளவிற்கு தற்போதைய விலையினை கொண்டுவர மத்திய அரசுக்கு தைரியம் உள்ளதா?" என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், "பெட்ரோல் விலை 84 முதல் 90 ரூபாய்க்கும், டீசல் விலை 75 முதல் 80 ரூபாய்க்கும் இந்தியாவில் விற்கப்படும் அதே வேலையில், மோடி அரசு 15 நாடுகளுக்கு பெட்ரோலை ரூ.34-க்கும், 29 நாடுகளுக்கு டீசலை ரூ.37-க்கும் விற்று வருவதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தெரிய வந்துள்ளது" எனவும் குறிப்பிட்டுள்ளார்!