Corona Alert.. ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதிக்க வேண்டும்: சுகாதார அமைச்சகம்

பொதுப் போக்குவரத்தை குறைவாகப் பயன்படுத்தும் நோக்கத்தில், ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதிக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் வைத்துள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 16, 2020, 08:04 PM IST
  • கொரோனா வைரஸ் தொற்றுநோயைத் தடுக்க அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்கிறது.
  • நாட்டின் அனைத்து பள்ளிகள், நீச்சல் குளங்கள், மால்கள் மார்ச் 31 வரை மூடப்பட்டன: சுகாதார அமைச்சகம்
  • சுகாதார அமைச்சகம் கூறியது- இந்த நேரத்தில் நாட்டில் 114 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளன.
  • ஈரானில் இருந்து மேலும் 53 இந்தியர்கள் நாடு திரும்பினர்: சுகாதார அமைச்சகம்.
Corona Alert.. ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதிக்க வேண்டும்: சுகாதார அமைச்சகம் title=

புது டெல்லி: நாட்டில் கொரோனா வைரஸ் (Covid-19) அதிகரித்து வருவதைத் தடுக்க மத்திய அரசு தொடர்ந்து முயன்று வருகிறது. திங்களன்று, இந்த ஆபத்தான வைரஸைக் கட்டுப்படுத்த சுகாதார அமைச்சகம் பல தேவையான வழிமுறைகளை வழங்கியுள்ளது. மார்ச் 31 வரை நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகள், நீச்சல் குளங்கள், மால்கள் போன்றவற்றை மூட வேண்டும் என்று சுகாதார அமைச்சின் இணை செயலாளர் லவ் அகர்வால் தெரிவித்தார். பொதுப் போக்குவரத்தை குறைவாகப் பயன்படுத்தும் நோக்கத்தில், ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்ய (Work from Home) அனுமதிக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் வைத்துள்ளார்.

 

சுகாதார அமைச்சின் இணைச் செயலாளர் லவ் அகர்வால் கூறுகையில், ஈரானில் இருந்து மேலும் 53 இந்தியர்களில் நாடு திரும்பியுள்ளனர். அவர்களை  தனிமைப்படுத்தி அனைவரும் ஜெய்சால்மரில் சிறப்பு கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளனர். கேரள், ஒடிசா, ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் பகுதியில் தலா ஒருவருக்கு என புதிதாக நான்கு பேருக்கு இந்த தொற்றுநோய் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

இதன்மூலம் தற்போது நாட்டில் 114 பேருக்கு கொரோனோ நோய் உறுதி செய்யப்பட்டுள்ளன. அதே நேரத்தில், அவர்களுடன் தொடர்பு கொண்ட 5,200 க்கும் மேற்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களை கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளன. இதுவரை 13 கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் சரி செய்யப்பட்டுள்ளனர். அதில் இரண்டு பேர் இறந்துள்ளனர் என்று கூறினார்.

 

சுகாதார அமைச்சின் இணை செயலாளர் கூறுகையில், Covid-19 தொடர்பாக வெளிவிவகார அமைச்சகம் ஒரு கால் சென்டரைத் தொடங்கியுள்ளது. இதன் மூலம் அனைத்து இந்தியர்களும் உதவி செய்யப்படும். இந்த கால் சென்டர் 24 மணி நேரமும் செயல்படும். ஐரோப்பிய ஒன்றியம், இங்கிலாந்து மற்றும் துருக்கி ஆகிய நாடுகளைச் சேர்ந்த பயணிகள் மார்ச் 18 முதல் இந்தியாவிற்கு வர தடை செய்யப்பட்டுள்ளனர். மேலிடத்தில் இருந்து உத்தரவு வரும் வரை தடை தொடரும் என்றார்.

 

Trending News