பெங்களூருவில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டவருக்கு மீண்டும் கொரோனா..!!!

கொரோனா தொற்றில் இருந்து மீண்டவருக்கு மீண்டும் கொரோனா ஏற்பட்டுள்ளது என்பதை பெங்களூருவில் உள்ள போர்டிஸ் மருத்துவமனை உறுதிபடுத்தியுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 6, 2020, 07:12 PM IST
  • கொரோனா தொற்றில் இருந்து மீண்டவருக்கு மீண்டும் கொரோனா ஏற்பட்டுள்ளது என்பதை பெங்களூருவில் உள்ள போர்டிஸ் மருத்துவமனை உறுதிபடுத்தியுள்ளது.
  • ஜூலை மாத இறுதியில் டெல்லியில் 50 வயதான ஒரு போலீஸ்காரருக்கு கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டது.
  • மேற்கு வங்காளத்தின் ஜல்பைகுரியில் உள்ள ஒரு சுகாதார ஊழியருக்கும் கோவிட் -19 தொற்று மீண்டும் ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டது,
பெங்களூருவில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டவருக்கு மீண்டும் கொரோனா..!!! title=

பெங்களூரு: கொரோனா தொற்றில் இருந்து மீண்டவருக்கு மீண்டும் கொரோனா ஏற்பட்டுள்ளது என்பதை பெங்களூருவில் உள்ள போர்டிஸ் மருத்துவமனை உறுதிபடுத்தியுள்ளது.

கொரோனாவில் இருந்து மீண்டவருக்கு மீண்டும் கொரோனா ஏற்படுவது பெங்களூருவில் இது முதல் தொற்று பாதிப்பு ஆகும்.

மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட்ட இந்த 22 வயது பெண்ணிற்கு கடந்த ஜூலை மாதம் தொற்றூ ஏற்பட்டது. அவருக்கு காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், முழுமையாக குணமானதும் வீடு திரும்பினார்.

இது குறித்து கருத்து தெரிவித்த மருத்துவர்கள், இவரது உடலில் நோயை எதிர்க்கும் ஆண்டி பாடிகள் நீண்ட நாள் வலுவாக இல்லை என்பதையே இது காட்டுகிறது எனவும், கூறினார்.

எனினும் அந்த பெண்ணிற்கு இரண்டு முறையும் தொற்று பாதிப்பு தீவிரமாக இல்லை என்பது நலல் விஷயமாகும்.

இதேபோன்ற ஒரு நிகழ்வில், ஜூலை மாத இறுதியில் டெல்லியில் 50 வயதான ஒரு போலீஸ்காரருக்கு கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டது. பின்னர் அவர் இந்திரபிரஸ்தா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முன்னதாக மே மாதத்தில் அவருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டது. ஆனால் அறிகுறிகள் எதுவும் இல்லை.

அதன் பிறகு, மேற்கு வங்காளத்தின் ஜல்பைகுரியில் உள்ள ஒரு சுகாதார ஊழியருக்கும் கோவிட் -19 தொற்று மீண்டும்  ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டது, அதன்பிறகு, மேலும் 3 பேருக்கு இதே போன்று மீண்டும் தொற்று ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டது. 

மேலும் படிக்க | TN COVID-19 நிலவரம்: இன்று 5,783 பேருக்கு தொற்று; 4 லட்சத்திற்கும் அதிகமானோர் குணம்

Trending News