இறப்பு 40,000 தாண்டியது - வரும் நாட்களில் இந்தியாவின் பல பகுதிகள் மிகவும் பாதிக்கும்

இந்தியாவில் கோவிட் -19 காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை புதன்கிழமை 40,000 பேரை தாண்டியது மற்றும் பாதிப்பு எண்ணிக்கை 19,00,000 ஆக உயர்ந்தது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 5, 2020, 07:05 PM IST
  • இந்தியாவில் கோவிட் -19 காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை 40,000 பேரை தாண்டியது
  • நாட்டில் 10 மாநிலங்களில் தான் அதிக அளவில் கொரோனா தொற்று பரவி வருகிறது.
  • அடர்த்தியான மக்கள் தொகை கொண்ட மகாராஷ்டிரா, தமிழ்நாடு உட்பட சில மாநிலங்களில் அதிக எண்ணிக்கையிலான பாதிப்பு.
  • மீட்பு விகிதம் 67.19% ஆக உயர்ந்துள்ளது. தற்போது வரை மொத்தம் 12,82,215 பேர் குணமடைந்து உள்ளனர்.
இறப்பு 40,000 தாண்டியது - வரும் நாட்களில் இந்தியாவின் பல பகுதிகள் மிகவும் பாதிக்கும் title=

புது டெல்லி: இந்தியாவில் கோவிட் -19 காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை புதன்கிழமை 40,000 பேரை தாண்டியது மற்றும் பாதிப்பு எண்ணிக்கை 19,00,000 ஆக உயர்ந்தது.

கோவிட் -19 தொற்று (COVID-19) மற்றும் இறப்புகள் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. 10 மாநிலங்களில் தான் அதிக அளவில் கொரோனா தொற்று பரவி வருகிறது என்றாலும், நாட்டின் பிற பகுதிகள் கொரோனா வைரஸ் தொற்று அதிக அளவில் பரவுவதற்கு வாய்ப்பு இருக்கிறது மற்றும் அதனால் பாதிப்பு அதிகரிக்கலாம் என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

லான்செட் குளோபல் ஹெல்த் பத்திரிகையில் வெளியிடப்பட்ட செய்தியில், புதுதில்லியில் மக்கள் தொகை கவுன்சில் சமீபத்தில் நடத்திய ஆய்வின்படி,  வடகிழக்கு தவிர நாட்டின் ஒவ்வொரு பிராந்தியத்திலும் பீகார், மத்தியப் பிரதேசம், தெலுங்கானா, ஜார்க்கண்ட், உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், ஒடிசா மற்றும் குஜராத் ஆகிய ஒன்பது பெரிய மாநிலங்களில் உள்ள பல மாவட்டங்கள், ஒட்டுமொத்தமாக பாதிக்கப்படக்கூடியவை என்று கண்டறியப்பட்டுள்ளது. 

மாநிலங்களின் மக்கள்தொகை மற்றும் உள்கட்டமைப்பு பண்புகளின் அடிப்படையில் இந்தியாவில் கோவிட் -19 நோயால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளை அடையாளம் காண்பதற்கான பாதிப்புக் குறியீட்டை ஆராய்ச்சியாளர்கள் கொண்டு வந்தனர். அதாவது சமூக பொருளாதார, மக்கள்தொகை, வீட்டுவசதி மற்றும் சுகாதாரம், தொற்றுநோயியல் மற்றும் சுகாதார அமைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் நோய் பரவுவதை கண்காணித்து வருகின்றனர். 

ஊரடங்கு விதியில் தளர்வு அளிக்கப்பட்ட பின்னர் நாட்டில் நோய்தோற்று அதிகரித்து வருவதாக பொது சுகாதார நிபுணர்கள் கூறினர்.

இந்தியா தொடர்ந்து இரண்டாவது நாளாக 6 லட்சத்துக்கும் மேற்பட்ட கோவிட் -19 மாதிரிகளை தொடர்ந்து சோதனை செய்து வருவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 6,19,652 சோதனைகள் நடத்தப்பட்ட நிலையில், ஒட்டுமொத்த சோதனை 2,14,84,402 ஐ எட்டியுள்ளது. சோதனை அதிகரித்து வருவதால், கொரோனா பாதிப்பு கண்டறியப்படுவதும் அதிகமாக உள்ளது.

அதிக அடர்த்தியான மக்கள் தொகை கொண்ட மாநிலங்களில் அதிக எண்ணிக்கையிலான பாதிப்பு உள்ளன. மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் மேற்கு வங்காளங்களில் அதிக எண்ணிக்கையிலான நோய்தோற்று காணப்படுகின்றன. 

இதற்கிடையில், கடந்த 24 மணி நேரத்தில் இந்தியா மிக அதிக ஒற்றை நாள் மீட்டெடுப்புகளையும் பதிவு செய்தது. 51,706 கோவிட் -19 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மீட்பு விகிதம் 67.19% ஆக உயர்ந்துள்ளது. தற்போது வரை மொத்தம் 12,82,215 பேர் குணமடைந்து உள்ளனர். இது சிகிச்சை பெற்று வருபவர்காலை விட இரண்டு மடங்கு அதிகம்.

Trending News