Hacking: இந்திய வெளியுறவு அமைச்சக அதிகாரிகளின் மின்னஞ்சல்கள் ஹேக்கிங்! அலர்ட்

 Dark Web Crime: டார்க்வெப் தொடர்பான விசாரணையில், வெளிவிவகார அமைச்சின் மின்னஞ்சல் சேவையகம் ஹேக் செய்யப்பட்டதும்,  உயரதிகாரிகளின் மின்னஞ்சல்கள் விற்கப்பட்டதும் அம்பலமானது  

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jan 24, 2023, 12:30 AM IST
  • டார்க்வெப் சைபர் கிரைமில் இந்திய வெளியுறவு அமைச்சகம்?
  • அமைச்சக மின்னஞ்சல்கள் ஹேக் செய்யப்பட்டன
  • வெளியாகும் சைபர் கிரைம் பகீர் தகவலகள்
Hacking: இந்திய வெளியுறவு அமைச்சக அதிகாரிகளின் மின்னஞ்சல்கள் ஹேக்கிங்! அலர்ட் title=

Cyber Crime:  "சைபர் அட்டாக்" என்ற இரண்டு வார்த்தைகள் மட்டுமல்ல, கடந்த 3 மாதங்களாக இந்திய அரசை சிக்கலில் ஆழ்த்தியுள்ளது. டார்க்வெப் தொடர்பான விசாரணையில், வெளிவிவகார அமைச்சின் மின்னஞ்சல் சேவையகம் ஹேக் செய்யப்பட்டதும்,  உயரதிகாரிகளின் மின்னஞ்சல்கள் விற்கப்பட்டதும் அம்பலமானது. அமைச்சக அதிகாரிகளின் ரகசிய மின்னஞ்சல்களை விற்றதாக ஹேக்கர் கூறியது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த விவகாரம் தேசிய பாதுகாப்பு தொடர்பானது என்பதாலும், உண்மை தெரிய வேண்டியதாலும், ஹேக்கரிடம் வாங்குபவராக பேரம் பேசத் தொடங்கிய்தாக தெரியவந்துள்ளது.

ஜப்பானில் வசிப்பதாகவும், ஜூன் 2022 முதல் ஜனவரி 2023 வரையிலான வெளியுறவு அமைச்சகத்தின் அனைத்து ரகசிய மின்னஞ்சல்களும் இருப்பதாகவும், முழு மின்னஞ்சலும் வேண்டுமென்றால் அதன் விலை 5 Ethereum (6 லட்சத்து 23 ஆயிரம் ரூபாய்) என்று ஹேக்கர் கூறினார். வெளியுறவு அமைச்சகத்தின் முழு சேவையகத்தையும் அணுக விரும்பினால், அதன் விலை 20 Ethereum (சுமார் 25 லட்சம் ரூபாய்) என்றும் தெரிவித்த அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது.

இதற்குப் பிறகு, ஹேக்கர் மற்ற துறைகள் அல்லது பிற அமைச்சக அதிகாரிகளுடன், வெளியுறவு அமைச்சக அதிகாரிகளின் சில மின்னஞ்சல் உரையாடல்களைப் பகிர்ந்து கொண்டார், அதில் ஒரு மெயிலில் வெளியுறவு அமைச்சகத்தின் மூத்த அதிகாரி மற்றொரு உயரதிகாரியுடன் உக்ரைன் பிரச்சினை குறித்து உள்ளீடு கேட்கிறார். இந்திய அரசாங்கத்தின் அதிகாரி, சர்வதேச கூட்டத்திற்கு, உக்ரைன் பிரச்சினையில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன என்பது தொடர்பாக வெளிவிவகார அமைச்சகம் என்ன சொல்கிறாது என்றும், அதற்கு ஆலோசனை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். இதுகுறித்து இரு அதிகாரிகளும் இ-மெயில் மூலம் பேசி வந்தனர்.

மேலும் படிக்க | 10000 மணி நேரம் செலவழித்து உருவாக்கிய கல்யாணா டிரஸ்! நடிகையின் கலக்கல் லேங்கா

மற்றொரு மின்னஞ்சலில், ஒரு வெளிநாட்டு ஹை-கமிஷன், தனது நாட்டில் ஒரு வட்டமேஜை மாநாடு நடைபெற உள்ளதாக வெளியுறவு அமைச்சகத்திடம் கூறுகிறது, அதில் அந்த நாடு இந்திய அமைச்சரை அழைக்க விரும்புகிறது. இதற்கு வெளியுறவு அமைச்சகம் ஒப்புதல் கொடுக்க வேண்டும். இது தொடர்பாக வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள், அந்நாட்டு ஹை கமிஷன் அதிகாரிகளுடன் மின்னஞ்சல் ஊடாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

மூன்றாவது மின்னஞ்சலில், இந்திய நாடாளுமன்றத்தின் மூத்த அதிகாரி ஒருவர், மாநிலங்களவை எம்.பி ஒருவர் தனது குடும்பத்துடன் இங்கிலாந்து செல்ல விரும்புவதாகவும், ஆனால் அந்த எம்.பி.யின் மகன் மற்றும் மகளுக்கு இன்னும் இங்கிலாந்து விசா கிடைக்கவில்லை என்றும் வெளியுறவு அமைச்சகத்திடம் தெரிவித்தார். எனவே, விசா செயல்முறையை விரைவுபடுத்த வெளியுறவு அமைச்சகம் அவர்களுக்கு உதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இதேபோல், டெல்லி எய்ம்ஸின் மூத்த மருத்துவர், ஒரு துறையின் தலைவராகவும் இருக்கிறார், ஜூலை மாதம் ஒரு மாநாட்டில் கலந்து கொள்ள அமெரிக்கா செல்ல வேண்டும் என்று வெளியுறவு அமைச்சகத்திற்கு மின்னஞ்சல் மூலம் கூறுகிறார், ஆனால் அவருக்கு அக்டோபர் மாதத்தில் தான் விசா அப்பாயின்ட்மென்ட் கிடைத்துள்ளது, இது தொடர்பான மின்னஞ்சல் ஒன்றில், மருத்துவர்களுக்கு உதவுமாறு மற்றொரு அதிகாரியிடம் கோரப்படுகிறது.  

மேலும் படிக்க | அரசின் அதிரடி அறிவிப்பு! இந்த வகை வாகனங்களின் உரிமம் ஏப்ரல் 1 முதல் ரத்து!

சுமார் 2 நாட்கள் ஹேக்கரிடம் நடத்திய விசாரணையில், மிக முக்கியமான தகவல்கள் கிடைத்தன, முதலில், வெளியுறவு அமைச்சகத்தின் மின்னஞ்சல் சேவையகத்தை ஹேக் செய்ததாகக் கூறி, உள் மின்னஞ்சல்களின் தரவை விற்று வரும் இந்த ஹேக்கர், இருப்பது, "வட கொரியா", ஆனால் தன்னை ஜப்பானியர் என்று அழைத்துக்கொண்டு டேட்டாவை விற்கிறார்.

இந்த மெயில்கள் உண்மையில் பரிமாறப்பட்டதா என்று ஹேக்கரால் பகிரப்பட்ட உள் MEA மின்னஞ்சல்களின் மாதிரிகளை நாங்கள் ஆதாரங்களுடன் சரிபார்த்த பிறகு, இந்த விஷயத்தின் விவரங்கள் ஜனவரி 11 அன்று மின்னஞ்சல் மற்றும் அழைப்பு மூலம் இந்திய வெளியுறவு செயலாளருடன் பகிர்ந்து கொள்ளப்பட்டன. 

உள்துறை அமைச்சகத்தின் இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையம், வெளியுறவு அமைச்சகத்தின் மின்னஞ்சல் அமைப்பு ஹேக்கிங் மற்றும் தரவு கசிவு விவகாரம் குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் ஜீ நியூஸ் கண்டறிந்துள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், இப்போது இந்திய அரசு எதுபோன்ற நடவடிக்கைகளை எடுக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

மேலும் படிக்க | 299 ரூபாயில் அஞ்சலகம் வழங்கும் அசத்தல் காப்பீடு; ரூ.10 லட்சம் வரையிலான பலன்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News