நடுவானில் ஏற்பட்ட இன்ஜின் கோளாறு.. அவசரமாக தரையிறக்கப்பட்ட இண்டிகோ விமானம்!

டெல்லி-டேராடூன் இண்டிகோ விமானம் 6E 2134 இன் இன்ஜின் எண். 2 நடுவானில் கோளாறானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  

Last Updated : Jun 21, 2023, 05:52 PM IST
  • இண்டிகோ விமானம் சம்பந்தப்பட்ட மற்றொரு அதிர்ச்சியான சம்பவம்.
  • தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இண்டிகோ விமானம் புறப்பட்ட இடத்திற்கே திரும்பியது.
  • விமானம் அவசரமாக தரையிறங்கையதற்கான சரியான காரணத்தை இன்னும் தெளிவுபடுத்தவில்லை.
நடுவானில் ஏற்பட்ட இன்ஜின் கோளாறு.. அவசரமாக தரையிறக்கப்பட்ட இண்டிகோ விமானம்! title=

இந்திய விமான போக்குவரத்து சந்தை வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் வேளையில், ஏர் இந்தியாவுக்கு கடுமையான போட்டி கொடுக்கும் வகையில், வளர்ச்சித் திட்டங்களை வகுத்து வரும் நிறுவனம் நாட்டின் மிகப்பெரிய பயணிகள் விமான சேவை நிறுவனமான இண்டிகோ விமான நிறுவனம். இன்டிகோ விமான நிறுவனம், 500 விமானங்களை வாங்குவதற்காக ஏர்பஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாக நேற்று தகவல் வெளியாகிய நிலையில், இன்று இண்டிகோ விமானம் சம்பந்தப்பட்ட மற்றொரு அதிர்ச்சியான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இன்டிகோ விமான நிறுவனத்தின் பயணிகள் விமானம் ஒன்று வானில் பறந்து கொண்டிருக்கும் போது, என்ஜினில் ஒன்றில் கோளாறு ஏற்பட்டதன் காரணமாக, டெல்லியின் T2 விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.  முன்னதாக, தில்லி-டேராடூன் இண்டிகோ விமானம் 6E 2134 இன் இன்ஜின் எண். 2 நடுவானில் தீப்பிடித்ததாக தகவல்கள் தெரிவித்த நிலையில், விமான நிறுவனம் அதனை மறுத்து, இன்ஜினில் கோளாறு ஏற்பட்டதாக குறிப்பிட்டுள்ளது..

“தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இண்டிகோ விமானம் (டெல்லி - டேராடூன்)  புறப்பட்ட இடத்திற்கே திரும்பியது. விமானி ஏடிசிக்கு நடைமுறைப்படி தகவல் அளித்து, அவசரமாக தரையிறங்க அனுமதி கோரினார். விமானம் டெல்லியில் பாதுகாப்பாக தரையிறங்கியது மற்றும் தேவையான பராமரிப்புக்குப் பிறகு மீண்டும் இயக்கப்படும்" என்று விமான நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர் - சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) - விமானம் அவசரமாக தரையிறங்கையதற்கான சரியான காரணத்தை இன்னும் தெளிவுபடுத்தவில்லை. மைசூரில் இருந்து ஹைதராபாத் செல்லும் அலையன்ஸ்  AT72-600 விமானம் புறப்படும்போது எரிபொருள் பேனல் திறக்கப்பட்டதால், அவசரமாக தரையிரக்கப்பட்டதைத் தொடர்ந்து, 24 மணி நேரத்தில் இதுபோன்ற இரண்டாவது சம்பவம் இதுவாகும்.

மேலும் படிக்க | Hurun India 500: பட்டியலில் முதலிடத்தில் ரிலையன்ஸ்! பின்னுக்கு தள்ளப்பட்ட அதானி

ஹைதராபாத் சம்பவம் குறித்து கூறிய சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் " விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பிற்கு, AME விமானதின் எரிபொருள் பேனல் திறக்கப்பட்டது பற்றி தகவல் கொடுத்தார். மைசூரில் எரிபொருள் ஏற்றப்படவில்லை. டி.ஜி.சி.ஏ. இந்த விஷயத்தை விசாரித்து வருகிறது. விசாரணையின் முடிவுகளின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறியது.

முன்னதாக, தனியார் விமான நிறுவனமான இன்டிகோ, விமான தயாரிப்பு நிறுவனமான ஏர்பஸ் நிறுவனத்திடம் 500 A320 ரக விமானங்களை வாங்குவற்கான ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. முன்னதாக மத்திய அரசிடமிருந்து ஏர்இந்தியாவை கையகப்படுத்திய டாடா குழுமம் அதனை மேலும் விரிவுபடுத்த சமீபத்தில் ஐரோப்பாவைச் சேர்ந்த ஏர்பஸ் விமான தயாரிப்பு நிறுவனத்திடமிருந்து 470 விமானங்களை வாங்கிட ஒப்பந்தம் மேற்கொண்ட நிலையில், அதனை முறியடிக்கும் நிலையில், இன்டிகோ நிறுவனம் மிகப்பெரிய அளவில் ஒப்பந்தத்தை போட்டுள்ளது. 

இண்டிகோ விமான நிறுவனம் ஆர்டர் செய்துள்ள இந்த 500 ஏர்பஸ் 320 ரக விமான ஒப்பந்தத்தின் மொத்த மதிப்பு 50 பில்லியன் டாலராக இருக்கும் என கணிக்கிடப்படுகிறது. 50 பில்லியன் டாலர் என்பது இந்திய ரூபாய் மதிப்பின்படி சுமார் 4.10 லட்சம் கோடி ரூபாய் ஆகும்.

மேலும் படிக்க | புகழின் உச்சத்திற்கு செல்லும் முகேஷ் அம்பானி! புதிய வரலாற்றை உருவாக்கிய ரிலையன்ஸ்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News