கட்டுமானத் தொழிலாளர்களுக்கு ரூ.5,000 நிதி அறிவித்தார் முதல்வர்...

கொரோனா வைரஸ் முழு அடைப்பில் தவித்து வரும் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு ரூ.5,000 நிதி உதவி வழங்க டெல்லி அரசு திங்களன்று முடிவு செய்தது.

Last Updated : May 11, 2020, 02:57 PM IST
கட்டுமானத் தொழிலாளர்களுக்கு ரூ.5,000 நிதி அறிவித்தார் முதல்வர்... title=

கொரோனா வைரஸ் முழு அடைப்பில் தவித்து வரும் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு ரூ.5,000 நிதி உதவி வழங்க டெல்லி அரசு திங்களன்று முடிவு செய்தது.

அமைச்சர் கோபால் ராய் தலைமையிலான கட்டுமானத் தொழிலாளர் நல வாரியக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது. இதன்படி வாரியத்தில் பதிவு செய்துள்ள சுமார் 40,000 கட்டுமானத் தொழிலாளர்களுக்கு அரசின் நிவாரண நிதி கிடைக்கும் என தகவல்கள் தெரிவிக்கிறது.

இதனிடையே இந்த நிதியை பெற கட்டுமானத் தொழிலாளர்களுக்கு ஏதுவாக ப்ரத்தியேக ஆன்லைன் போர்ட்டலைத் தொடங்கவும் அரசு முடிவு செய்துள்ளது.

COVID-19 தொற்றுநோய் முழு அடைப்பு காரணமாக கட்டுமானத் தொழிலாளர்களுக்கு ஏற்கனவே அரசாங்கம் ரூ.5 ஆயிரம் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே COVID-19 இறப்புத் தரவு பொருந்தாததற்கு டெல்லி அரசு ஞாயிற்றுக்கிழமை மருத்துவமனைகளை குறை கூற முயன்றதுடன், இதுபோன்ற இறப்புகளை சரியான நேரத்தில் தெரிவிக்க வழிகாட்டுதல்களை வெளியிட்டது.

310 புதிய வழக்குகளுடன், தேசிய தலைநகரில் மொத்த தொற்றுநோய்கள் 7233-ஆக அதிகரித்துள்ளது. மே 8 நள்ளிரவு முதல் மே 9 நள்ளிரவு வரை, வைரஸ் காரணமாக ஐந்து புதிய உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன, இறப்பு எண்ணிக்கை 73-ஆக உயர்ந்துள்ளது என்று நகர அரசு தனது சுகாதார அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இறந்தவர்களில் வடக்கு டெல்லி மாநகராட்சி நடத்தும் பள்ளியின் பெண் ஒப்பந்த ஆசிரியரும் அவரது கணவரும் அடங்குவதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர். அந்த பெண் மே 2 ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மே 4 ஆம் தேதி இறந்தார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

டெல்லியில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றுநோயை கட்டுக்குள் கொண்டு வர முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அரசு கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. எனினும் டெல்லியில் கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை குறைந்தபாடு இல்லை. எனவே முழு அடைப்பு விதிகளில் தளவுகள் தற்போது டெல்லியில் குறைவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது, இந்நிலையில் முழு அடைப்பால் பணிகள் இன்றி தவிக்கும் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு உதவ மீண்டும் நிதி உதவி அறிவித்துள்ளது.

Trending News