அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக விஸ்வாஸ் போர்க்கொடி

Last Updated : May 3, 2017, 12:57 PM IST
அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக விஸ்வாஸ் போர்க்கொடி title=

டெல்லி மாநகராட்சி தேர்தலில் தோல்விக்குக் காரணம் ஆம் ஆத்மி கட்சியில் ஊழலே என அக்கட்சியின் எம்எல்ஏ.,வாக உள்ள குமார் விஸ்வாஸ் கூறியுள்ளார்.

ஆம் ஆத்மி கட்சி மீதான ஊழல் புகார்களை சீர்செய்ய கட்சித் தலைமை முன்வர வேண்டும் என்று அதிருப்தி எம்எல்ஏ குமார் விஸ்வாஸ் வலியுறுத்தியுள்ளார்.

அண்மையில் நடைபெற்று முடிந்த டெல்லி மாநகராட்சி தேர்தலில் ஆளுங்கட்சியான ஆம் ஆத்மிக்கு பெரும் தோல்வியே ஏற்பட்டது. இதற்கு கட்சி மீது பல ஊழல் புகார்கள் எழுந்துள்ளதும் காரணமாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், தேர்தல் முடிவுகள் பற்றி கருத்து தெரிவித்த அர்விந்த் கெஜ்ரிவால், பாஜக.,வின் சதியே காரணம் எனக் கூறியிருந்தார். 

ஆனால் அக்கட்சி எம்எல்ஏ.,வாக உள்ள குமார் விஸ்வாஸ் கூறுகையில், பாஜக.,வின் சதியை விட, ஆம் ஆத்மி கட்சியில் ஊழல் மலிந்துவருவதே தோல்விக்குக் காரணம். கட்சியிலும், ஆட்சியிலும் நிலவும் ஊழலை சீர்செய்ய வேண்டும் என கூறினார்.

மேலும் விஸ்வாஸ் 3 விதமான கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால் இந்த கோரிக்கைகளுக்கு அர்விந்த் கெஜ்ரிவால் சம்மதம் தெரிவிக்க வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது.

இதனால், கெஜ்ரிவால் மற்றும் விஸ்வாஸ் இடையே மோதல் ஏற்பட்டது. 

இந்நிலையில் கெஜ்ரிவால் தரப்பினர், குமார் விஸ்வாஸ், பாஜக.,வின் எடுபிடியாகச் செயல்பட்டு வருவதாக விமர்சித்து உள்ளனர். 

இதனால், ஆம் ஆத்மி கட்சி இரண்டாக உடையும் வாய்ப்புகள் அதிகம் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுவதாக தகவல் வந்துள்ளது.

Trending News