ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டுவோரை நடுரோட்டில் தடுத்து நிறுத்த வேண்டாம், பிறகு பார்த்துக்கொள்வோம் விட்டுவிடுங்கள் என என மகாராஷ்டிரா முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம் புனே நகரில் இருசக்கர வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் அணியும் நடைமுறைக்கு எதிராக பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இம்மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் இருசக்கர வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் அணியாதவர்களை நடுரோட்டில் தடுத்து நிறுத்த வேண்டாம் என உத்தரவு பிரப்பித்துள்ளார்.
மறாக சட்ட விதிகளை மீறுவோரை CCTV கேமரா உதவியுடன் கண்டறிந்து, அவர்களது வீட்டிற்கு செல்லான்களை அனுப்ப போக்குவரத்து காவல் துறையினருக்கு அவர் உத்தரவிட்டிருக்கிறார். ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர் நடுரோட்டில் நிறுத்தப்படுவதால், பொதுமக்களுக்கு ஏற்படும் இடையூரை தடுக்க இவ்வாறான நடவடிக்கை மேற்கொண்டுள்ளார் தேவேந்திர பட்னாவிஸ்.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடுகையில்., நகரம் முழுக்க போக்குவரத்து காவல் துறையினர் நிறுவி இருக்கும் CCTV கேமராக்களை கொண்டு ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுவோரை மிக எளிமையாக கண்டறிந்து விட முடியும். பின் புகைப்படங்களை கொண்டு இ-செல்லான் உருவாக்கி, அவரவர் வீடுகளுக்கு அனுப்ப முடியும்.
வீட்டிற்கு வரும் செல்லாண்களுக்கு, விதிகளை மீறியவர்கள் ஆன்லைன் மூலமாகவும் பணம் செலுத்த முடியும். எனினும், தொடர்ந்து விதிகளை மீறுவோர் மீது மிகப்பெரும் தொகை அபராதமாக விதிக்கப்படும். அபராதம் செலுத்தாதவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.