ஜார்க்கண்ட் மாநில தேர்தல் அட்டவணை மாலை 4:30 மணிக்கு அறிவிக்கப்படும்

ஜார்க்கண்டில் சட்டமன்றத் தேர்தலுக்கான தேதி மற்றும் எத்தனை கட்டங்களாக நடைபெற உள்ளது என தேர்தல் ஆணையம் இன்று மாலை அறிவிக்க உள்ளது.

Written by - Shiva Murugesan | Last Updated : Nov 1, 2019, 02:09 PM IST
ஜார்க்கண்ட் மாநில தேர்தல் அட்டவணை மாலை 4:30 மணிக்கு அறிவிக்கப்படும் title=

புதுடில்லி: ஜார்க்கண்டில் சட்டமன்றத் தேர்தலுக்கான (Jharkhand Legislative Assembly election, 2019) தேதிகளை மாலை 4.30 மணிக்கு தேர்தல் ஆணையம் (Election Commission of India) அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏப்ரல்-மே மாத நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) தலைமையிலான பாஜகவை பெரிய வெற்றியைப் பெற்ற பின்னர், அக்டோபர் 21 அன்று மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதனையடுத்து தற்போது ஜார்க்கண்டில் (Jharkhand) மாநில சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதற்கான தேதி மற்றும் எத்தனை கட்டங்களாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவிக்க உள்ளது. 

இந்த ஆண்டு நடக்கும் 3வது மாநில சட்டசபை தேர்தல் ஆகும். இந்த மூன்று மாநிலங்களிலும் (மகாராஷ்டிரா, ஹரியானா மற்றும் ஜார்க்கண்ட்) பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

தற்போது ஜார்கண்ட் மாணவர் சங்கத்துடன் (ஏ.ஜே.எஸ்.யு-AJSU) கூட்டணியில் மாநிலத்தை ஆளுகின்ற பாஜக, மகாராஷ்டிரா மற்றும் ஹரியானாவில் கிடைத்த வெற்றியை விட சிறந்த முடிவுகளை எதிர்பார்க்கும். பாஜக (Bharatiya Janata Party) இரு மாநிலங்களிலும் அதிக வித்தியாசத்தில் வெல்லும் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் பின்னடைவுகளை சந்தித்தது. கடந்த தேர்தலில் இருந்ததை விட இந்த முறை இரண்டு மாநிலங்களிலும் (மகாராஷ்டிரா, ஹரியானா) குறைவான இடங்களை வென்றது. இதனால் ஹரியானா மாநிலத்தில் ஜேஜேபி உடன் கூட்டணி அமைத்து ஆளும் கட்சியாக அமர்ந்துள்ளது. அதேவேலையில் பாஜகவுடன் சேர்ந்து மாநிலத்தில் அரசாங்கத்தை அமைப்பதற்கான 50-50 சூத்திரத்தில் சிவசேனா பிடிவாதமாக இருப்பதால், இன்னும் அங்கு யார் தலைமையில் ஆட்சி அமைய உள்ளது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

எனவே இதுபோன்ற சூழ்நிலை ஏற்படாமல் இருக்க ஜார்கண்ட் மாநிலத்தில் அதிக இடங்களில் வெற்றி பெற பல வியூகங்களை பாஜக வகுத்து வருகிறது. அதற்காக பல திட்டங்களை கைவசம் வைத்துள்ளது. 

Trending News