விவசாயிகள் போராட்டம்: வன்முறையில் ஈடுபட்டால் விசா, பாஸ்போர்ட் ரத்து... ஹரியானா அரசு அதிரடி

Farmers Protest: வன்முறையில் ஈடுபட்டவர்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர்களது தகவல்கள் பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு அளிக்கப்படும் என்றும் அம்பாலா துணைக் காவல் கண்காணிப்பாளர் கூறினார்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 29, 2024, 08:48 PM IST
  • பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பவர்களின் பாஸ்போர்ட் மற்றும் விசாக்களை ரத்து செய்யப்போவதாக ஹரியானா அரசு அறிவித்துள்ளது.
  • பொதுச் சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டால் அதை போராட்டக்காரர்கள்தான் ஏற்க வேண்டும்: அம்பாலா காவல்துறை
  • ஆர்ப்பாட்டக்காரர்கள் காவல்துறை மீது கற்களை வீசி தாக்கி வருகிறார்கள்: காவல்துறை
விவசாயிகள் போராட்டம்: வன்முறையில் ஈடுபட்டால் விசா, பாஸ்போர்ட் ரத்து... ஹரியானா அரசு அதிரடி title=

Farmers Protest: கடந்த சில நாட்களாக பல வித கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் டெல்லி எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரசாங்கத்துடன் பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்தும் இன்னும் எந்த வித தீர்வும் எட்டப்படவில்லை. இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசயிகளுக்கு எதிரான ஒரு அதிரடி நடவடிக்கையை ஹரியாணா அரசாங்கம் எடுத்துள்ளது. பஞ்சாப்-ஹரியானா எல்லையில் வன்முறையை பரப்புபவர்கள் மற்றும் பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பவர்களின் பாஸ்போர்ட் மற்றும் விசாக்களை ரத்து செய்யப்போவதாக ஹரியானா அரசு அறிவித்துள்ளது.

வன்முறையில் ஈடுபட்டவர்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர்களது தகவல்கள் பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு அளிக்கப்படும் என்றும் அம்பாலா துணைக் காவல் கண்காணிப்பாளர் கூறினார். அவர்களது விசாக்கள் மற்றும் பாஸ்போர்டுகளை ரத்து செய்யுமாறு அமைச்சகம் மற்றும் தூதரகத்தை காவல்துறை வலியுறுத்தவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

சம்யுக்தா கிசான் மோர்ச்சா மற்றும் கிசான் மஸ்தூர் மோர்ச்சா ஆகிய விவசாயிகள் சங்கங்களின் தலைமையில், கடந்த சில நாட்களாக, பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு (MSP) சட்டப்பூர்வ உத்தரவாதம் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

விவசாயி சுப்கரன் சிங் மரணம் தொடர்பாக எப்ஐஆர் பதிவு செய்த பஞ்சாப் போலீஸ்

இதற்கிடையில், பஞ்சாப் போலீசார் வியாழக்கிழமை, அதாவது இன்று, விவசாயிகள் போராட்டத்தின் போது உயிர் இழந்த விவசாயி சுப்கரன் சிங் வழக்கில் ஜீரோ எஃப்ஐஆர் பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை குறித்து சட்ட நிபுணர்களுடன் கலந்தாலோசிக்கப்படும் என்றும் அதன் பிறகு சட்டப்படி விசாரணை தொடரும் என்றும் பஞ்சாப் ஐஜிபி சுக்செயின் சிங் கில் கூறினார்.  

"சுப்கரன் சிங் விவகாரத்தில், சட்ட நிபுணர்களுடன் கலந்தாலோசித்து, பஞ்சாப் காவல்துறை ஜீரோ எஃப்ஐஆர் -ஐ பதிவு செய்துள்ளது. மேலும் இதில் சட்டப்படி விசாரணை மேற்கொள்ளப்படும். அவரது குடும்பத்தினர் இன்று அவரது இறுதிச் சடங்குகளை செய்கிறார்கள். பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் அவரது குடும்பத்திற்கு ரூ. 1 கோடி இழப்பீட்டை வழங்கியுள்ளார். அவரது குடும்பத்தில் ஒரு ஒரு பெண்ணுக்கு கான்ஸ்டபிள் பணி வழங்கப்படுகிறது" என்று கில் தெரிவித்தார். 

மேலும் படிக்க | புண்ணிய நதியையே கழிவுநீராக்கிய நீர்மாசு! கங்கையில் குளிக்கத் தடை விதித்த பசுமை தீர்ப்பாயம்!

பொதுச் சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டால் அதை போராட்டக்காரர்கள்தான் ஏற்க வேண்டும்: அம்பாலா காவல்துறை

முன்னதாக, போராட்டத்தின் போது பொதுச் சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டால், அதற்கு இழப்பீடாக, சேதம் விளைவித்த போராட்டக்காரர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என ஹரியானா காவல்துறை தெரிவித்திருந்தது. அம்பாலா காவல்துறை அதிகாரப்பூர்வ செய்தி அறிக்கையை வெளியிட்டு, பிப்ரவரி 13 ஆம் தேதி முதல் விவசாயிகள் அமைப்புகள் சம்பு எல்லையில் போடப்பட்ட தடுப்புகளை உடைக்க தொடர்ச்சியாக முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும், சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் முயற்சிகள் தினமும் நடப்பதாகவும், ஆர்ப்பாட்டக்காரர்கள் காவல்துறை மீது கற்களை வீசி தாக்கி வருவதாகவும் கூறியது. விவசாயிகளின் இந்த செயல்கள் பொது மக்களுக்கும் தொந்தரவுகளை ஏற்படுத்துவதாகவும் காவல் துறை மேலும் தெரிவித்தது. 

"போராட்டக்காரர்களால் அரசு மற்றும் தனியார் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதத்தை மதிப்பீடு செய்து வருகிறோம். இந்த போராட்டத்தின் போது, அரசு மற்றும் தனியார் சொத்துக்களுக்கு போராட்டக்காரர்கள் சேதம் விளைவித்தால், அவர்களின் சொத்துகளை பறிமுதல் செய்தும், வங்கிக் கணக்குகளை முடக்கியும் இழப்பீடு பெறப்படும் என்று நிர்வாகம் ஏற்கனவே எச்சரித்திருந்தது." என அதிகாரப்பூர்வ வெளியீட்டில் தெரிவிக்கப்பட்டது. 

மேலும் படிக்க | விசிட் அடித்த பிரதமர்... ரெடியான தென்னிந்திய வேட்பாளர் லிஸ்ட் - இன்று வெளியீடு?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News