5 State Election Date Announced: நாடு முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல்களுக்கான அட்டவணை இன்று (அக். 9) அறிவிக்கப்பட்டது. இந்திய தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து இந்த தேர்தல் தேதிகளை அறிவித்தார்.
மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், தெலங்கானா மற்றும் மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் நடைபெறவிருக்கும் சட்டப்பேரவை தேர்தல்களுக்கான முக்கிய அட்டவணை வெளியிடப்பட்டது. 5 மாநிலங்களில் நவம்பர் 7ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் தொடங்கும் என்றும், டிசம்பர் 3-ம் தேதி தேர்தல் வாக்கெடுப்பு நடத்தப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
- மிசோரம் - நவம்பர் 7
- மத்திய பிரதேசம் - நவம்பர் 17
- ராஜஸ்தான் - நவம்பர் 23
- சத்தீஸ்கர் - நவம்பர் 7 மற்றும் 17 (2 கட்டமாக)
- தெலங்கானா - நவம்பர் 30
5 மாநிலங்களிலும் வாக்கு எண்ணிக்கை - டிசம்பர் 3
மிசோரம்
மிசோரம் மாநிலத்தில் மொத்தம் 40 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. மிசோரமில் கடந்த 2018இல் மிசோ தேசிய முன்னணி கட்சி 26 இடங்களிலும், இந்திய தேசிய காங்கிரஸ் 5 இடங்களையும், சோரம் மக்கள் இயக்கம் 8 இடங்களையும், பாஜக 1 இடத்தையும் வென்றன. இதில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியுடன் இணைந்து மிசோ தேசிய முன்னணி மிசோரத்தில் ஆட்சி அமைத்தது. மிசோ தேசிய முன்னணி தலைவர் சோரம்தாங்கா முதலமைச்சராக பதிவேயற்றார். வரும் 2023ஆம் ஆண்டு தேர்தல் வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நவ. 7ஆம் தேதி நடக்கிறது.
மத்திய பிரதேசம்
மத்திய பிரதேசத்தில் மொத்தம் 230 தொகுதிகள் உள்ளன. கடந்த 2018 தேர்தலில், காங்கிரஸ் 114 இடங்களையும், பாஜக 109 இடங்களைும் கைப்பற்றின. மேலும், பகுஜன் சமாஜ் கட்சி 2 இடங்களையும், சமாஜ்வாடி கட்சி 1 இடத்தையும் கைப்பற்றினர். சுயேட்சையாக நான்கு பேர் வென்றனர். இதையடுத்து, காங்கிரஸ் 15 ஆண்டுகளுக்கு பின் அங்கு ஆட்சியை பிடித்தனர்.
கமல்நாத் முதல்வராக பொறுப்பேற்றார். தொடர்ந்து, 2020இல் 22 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ததை தொடர்ந்து, காங்கிரஸ் ஆட்சி 2020ஆம் ஆண்டு மார்ச் 20ஆம் தேதி கவிழ்க்கப்பட்டது. மீண்டும் சிவராஜ் சிங் சௌகான் முதல்வராக 2020 மார்ச் 23ஆம் தேதி பொறுப்பேற்றார். வரும் சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு ஒரே கட்டமாக வரும் நவ. 17ஆம் தேதி அங்கு நடக்கிறது.
ராஜஸ்தான்
தற்போது காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் முக்கிய மாநிலங்களில் ஒன்று ராஜஸ்தான். இங்கு மீண்டும் பாஜக ஆட்சியை கைப்பற்ற மும்முரமாக உள்ளது. இங்குள்ள 200 தொகுதிகளுக்கும் வரும் நவ. 23ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
சத்தீஸ்கர்
காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் மற்றொரு முக்கிய மாநிலம், சத்தீஸ்கர். அங்கு பூபேஷ் பாகல் முதலமைச்சராக உள்ளார். தற்போது சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு இரண்டு கட்டமாக இங்கு நடைபெறுகிறது. மொத்தமுள்ள 90 இடங்களில் நவ. 7ஆம் தேதி மற்றும் நவ. 17ஆம் தேதி இங்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
தெலங்கானா
2014ஆம் ஆண்டில் தெலங்கானா மாநிலம் உதயமானது முதல் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி ஆட்சியில் இருக்கிறது. சந்திரசேகர ராவ் முதலமைச்சராக உள்ளார். இங்குள்ள 119 தொகுதிகளுக்கும் இந்த முறை ஒரே கட்டமாக தேர்தல் நவ. 30ஆம் தேதி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ