பீகார் முன்னாள் எம்.பியின் மருமகன் சுட்டுக்கொலை!

பீகார் ராஷ்டிரிய ஜனதா தள கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்.பி முகம்மது ஷகாபுதீனின் மருமகன் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். 

Last Updated : Feb 2, 2019, 12:58 PM IST
பீகார் முன்னாள் எம்.பியின் மருமகன் சுட்டுக்கொலை! title=

பீகார் ராஷ்டிரிய ஜனதா தள கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்.பி முகம்மது ஷகாபுதீனின் மருமகன் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். 

பீகார் மாநில முன்னாள் எம்.பியும், ராஷ்டிரிய ஜனதா தள கட்சியை சேர்ந்தவர் முகம்மது ஷகாபுதீன். இவர் ராஷ்டிரிய ஜனதா தள கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவுக்கு மிகவும் நெருக்கமானவர். 

இந்த நிலையில், இவரது மருமகன் யூசுப் நேற்று மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இது தொடர்பாக தற்போது போலீசாரை தங்களத்துவ விசாரணையைத் தொடங்கியுள்ளனர். மேலும், முகம்மது ஷகாபுதீன் ஒரு கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றவர் மற்றும் அவர் மீது சுமார் 60க்கும் மேற்பட்ட வழக்குகளும் உள்ளன. 

இதனால் அவரது எதிரிகள் தான் யூசுபை கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். இது தொடர்பாக தற்போது போலீசாரை தங்களத்துவ விசாரணையைத் தொடங்கியுள்ளனர். 

Trending News