மாற்றுத்திறனாளிப் பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த 4 சிறுவர்கள்

மாற்றுத்திறனாளிப் பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த நான்கு சிறுவர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்

ZEE Bureau ZH Web (தமிழ்) | Updated: Jun 30, 2020, 06:04 PM IST
மாற்றுத்திறனாளிப் பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த 4 சிறுவர்கள்
File photo

மத்தியபிரதேச மாநிலத்தில் மாற்றுத்திறனாளிப் பெண்ணை நான்கு மைனர் சிறுவர்கள் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது

மத்தியப் பிரதேச மாநிலத்தில் வாய் பேச முடியாத பெண்ணை நான்கு சிறுவர்கள் இணைந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்திருக்கும் செய்தி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த பாலியல் வன்கொடுமை செய்த 4 சிறுவர்களில் மிகவும் இளையவனின் வயது 11 என்பது திகைப்பை ஏற்படுத்துகிறது. மத்திய பிரதேசத்தின் சதர்பூர் மாவட்டத்தில் இந்த கூட்டு பாலியல் வன்புணர்வு கொடுமை நடைபெற்றதாக செவ்வாய்க்கிழமையன்று போலீசார் தெரிவித்தனர்.

Also Read | ஜூலை 31 வரை தமிழ்நாட்டில் லாக்டவுன் நீட்டிப்பு

திங்கள்கிழமையன்று கூட்டு பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட நான்கு சிறுவர்களும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மீது கெளரிஹர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை கண்காணிப்பாளர் சச்சின் ஷர்மா தெரிவித்தார்.

குற்றம் சாட்டப்பட்ட சிறுவர்கள் 11 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும், மேலதிக விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.

மாவட்ட தலைமையகத்திலிருந்து 90 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள கெளரிஹர் காவல் நிலைய சரகத்திற்குள் ஞாயிற்றுக்கிழமை மாலை இந்த சம்பவம் நடந்ததாக காவல் நிலைய பொறுப்பாளர் சரிதா வெர்மன் தெரிவித்தார்.

பாதிக்கப் பெண் வயலுக்கு சென்ற பெண் வீட்டிற்கு திரும்பவில்லை என்பதால், குடும்பத்தினர் அவரைத் தேடிக் கொண்டிருந்தார்கள். அப்போது காயமடைந்த நிலையில் ஒரு சாலையோரத்தில் அந்த பெண் கண்டுபிடிக்கப்பட்டார்.

READ | கொரோனில் Covid-யை குணப்படுத்தும் என நாங்கள் சொல்லவில்லை: பதஞ்சலி CEO

பாதிக்கப்பட்ட பெண், சைகை மொழியில் தனக்கு நிகழ்ந்த கொடுமையைப் பற்றி  தனது குடும்பத்தினரிடம் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து காவல்த்துறையில் குடும்பத்தினர் புகார் அளித்தனர்.  புகாரின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், குற்றம் சாட்டப்பட்ட சிறுவர்கள், தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

ஆனால் நான்கு சிறுவர்கள் இணைந்து வாய் பேச முடியாத அபலைப் பெண்ணை கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கிய சம்பவம் ஆழ்ந்த அதிர்ச்சியை எழுப்பியுள்ளது.