புதுடெல்லி: பங்களாதேஷின் நிறுவகத் தலைவர் ஷேக் முஜிபுர் ரஹ்மானுக்கு மதிப்புமிக்க காந்தி அமைதி பரிசு 2020 வழங்கப்படுகிறது.
1995 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்த விருது, முதன்முறையாக மரணத்திற்குப் பிந்தைய விருதாக வழங்கப்படுகிறது. இந்த விருதில் ஒரு பட்டயம் மற்றும் ஒரு கோடி ரொக்கப் பரிசுத் தொகையும் அடங்கும்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான விருதுக்குழு பங்களாதேஷின் நிறுவகத் தலைவரை காந்தி அமைதி பரிசுக்கானவராக தேர்ந்தெடுத்துள்ளது. அகிம்சை மற்றும் காந்திய முறைகள் மூலம் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் மாற்றத்திற்கு சிறப்பான பங்களிப்பு செய்ததற்காக இந்த விருதை ஷேக் முஜிபுர் ரஹ்மானுக்கு வழங்க விருதுக்குழு ஒருமனதாக முடிவு செய்துள்ளது.
Also Read | 9.17L அரசு ஊழியர்களுக்கு ஏப்ரல் 1 முதல் 30% சம்பள உயர்வு
இந்த விருது பங்களாதேஷின் விடுதலையை ஊக்குவிப்பதற்கும் அமைதியை மேம்படுத்துவதற்கும் பங்கபந்து (Bangabandhu) என்று அழைக்கப்படும் Sheikh Mujibur Rahmanஇன் உழைப்பை பெருமைப்படுத்துகிறது. அவருடைய பங்களாதேஷின் விடுதலைக்கான மகத்தான மற்றும் இணையற்ற பங்களிப்பை அங்கீகரிக்கிறது.
ஷேக் முஜிபுர் ரஹ்மானைப் பற்றி குறிபிட்ட விருதுக் குழுத் தலைவர் மோடி, "மனித உரிமைகள் மற்றும் சுதந்திரத்தின் சாம்பியன்" மற்றும் "அனைத்து இந்தியர்களுக்கும் ஹீரோ" என்று குறிப்பிட்டார்."
Also Read | குடிமகன்களுக்கு குஷியான செய்தி! மது அருந்துவதற்கான சட்டபூர்வ வயது வரம்பு குறைப்பு
மார்ச் 26ஆம் தேதியன்று பிரதமர் மோடி, இரண்டு நாட்கள் பயணமாக பங்களாதேஷ் செல்லவிருக்கிறர். அதற்கு முன்னதாக இந்த அறிவிப்பு வந்துள்ளது.
பங்களாதேஷின் தந்தை' பங்கபந்து 'ஷேக் முஜிபுர் ரஹ்மானின் பிறந்த நூற்றாண்டு விழாவான முஜிப் போர்ஷோ தற்போது அனுசரிக்கப்படுகிறது. பங்களாதேஷ், இந்தியாவுடனான 50 ஆண்டு ராஜதந்திர உறவுகளை மதிக்கிறது. பங்களாதேஷ் விடுதலை பெற்று 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து அந்நாட்டில் உற்சாகக் கொண்டாட்டங்கள் தொடர்கின்றன.
Also Read | GST செலுத்துபவர்களுக்காக நிதியமைச்சகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR