ஜம்மு காஷ்மீர் மாநில சிறப்பு அந்தஸ்து ரத்து: அதிமுக முழு வரவேற்ப்பு!!

காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக பிரிக்கும் மசோதாவுக்கும் அதிமுக ஆதரவு அளிக்கிறது என மாநிலங்களவையில் அதிமுக எம்.பி. நவநீத கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 5, 2019, 01:29 PM IST
ஜம்மு காஷ்மீர் மாநில சிறப்பு அந்தஸ்து ரத்து: அதிமுக முழு வரவேற்ப்பு!! title=

புது டெல்லி: காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக பிரிக்கும் மசோதாவுக்கும் அதிமுக ஆதரவு அளிக்கிறது என மாநிலங்களவையில் அதிமுக எம்.பி. நவநீத கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக ஏற்பட்டு வந்த பரபரப்பு இன்று விடை கிடைத்துள்ளது. காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370ஏ-ஐ ரத்து செய்ய மத்திய அமைச்சரவை முடிவு செய்யப்பட்டுள்ளதாக மாநிலங்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார். இதற்கு காங்கிரஸ், திமுக உட்பட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

உள்துறை அமைச்சர் ஷா வெளியிட்டுள்ள அறிக்கையில், "நோக்கம் மற்றும் விளக்கத்தின் அறிக்கை", "ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் லடாக் பிரிவு ஒரு பெரிய பரப்பளவைக் கொண்டுள்ளது. ஆனால், மிகக் கடினமான நிலப்பரப்பைக் கொண்டிருக்கிறது.  லடாக் மக்கள் தங்கள் அபிலாஷைகளை உணர உதவும் வகையில் யூனியன் பிரதேசத்தின் அந்தஸ்தை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது. லடாக் யூனியன் பிரதேசம் சட்டமன்றம் இல்லாமல் இருக்கும்.

"மேலும், தற்போதுள்ள ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தால் தூண்டப்பட்ட தற்போதைய உள்நாட்டு பாதுகாப்பு நிலைமையைக் கருத்தில் கொண்டு, ஜம்மு-காஷ்மீருக்கான தனி யூனியன் பிரதேசம் உருவாக்கப்பட்டு வருகிறது. ஜம்மு-காஷ்மீரின் யூனியன் பிரதேசம் சட்டமன்றத்துடன் இருக்கும்" என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்த முடிவிற்கு எங்கள் கட்சி முழுமையான ஆதரவை அளிக்கிறது. மசோதா நிறைவேற்றப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். பிரிவு 370 மசோதா மற்றும் பிற மசோதாவுக்கு எங்கள் கட்சி எந்த எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை என பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி. சதீஷ் சந்திர மிஸ்ரா மாநிலங்களவையில் தெரிவித்துள்ளார். 

அதேபோல தமிழகத்தை சேர்ந்த ஆளும் கட்சியாக இருக்கும் அதிமுக அரசு ஆதரவு தெரிவித்துள்ளது. மாநிலங்களவையில் பேசிய நவநீத கிருஷ்ணன், காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370ஏ-ஐ ரத்து செய்யும் மத்திய அமைச்சரவையின் முடிவை நாங்கள் ஆதரிக்கிறோம். சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதைகே குறித்து எந்தவித கவலையும் படவேண்டாம். மத்திய அரசு சரியான நடவடிக்கை எடுத்துள்ளது எனவும் பாராட்டினார். 

காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக பிரிக்கும் மசோதாவுக்கும் அதிமுக ஆதரவு அளிக்கிறது எனவும் மாநிலங்களவையில் கூறினார்.

Trending News