கவனக்குறைவான பயிற்சியாளர்களுக்கு எச்சரிக்கை -சந்தீப் சிங்!

கவனக்குறைவான பயிற்சியாளர்களுக்கு வேலை செய்ய விருப்பம் இல்லையென்றால் வேலையை விட்டுவிட்டு வீட்டில் உட்கார்ந்து கொள்ளும்படி விளையாட்டு துறை அமைச்சர் சந்தீப் சிங் எச்சரித்துள்ளார்!

Last Updated : Nov 26, 2019, 08:12 AM IST
கவனக்குறைவான பயிற்சியாளர்களுக்கு எச்சரிக்கை -சந்தீப் சிங்! title=

கவனக்குறைவான பயிற்சியாளர்களுக்கு வேலை செய்ய விருப்பம் இல்லையென்றால் வேலையை விட்டுவிட்டு வீட்டில் உட்கார்ந்து கொள்ளும்படி விளையாட்டு துறை அமைச்சர் சந்தீப் சிங் எச்சரித்துள்ளார்!

மேலும், தற்போது எந்த பயிற்சியாளரும் சரிவர பணியாற்றவில்லை எனவும், அவ்வாறு அவர்கள் பணியாற்றவில்லை என்றால் வெளியேற்றப்படுவார்கள் என்றும் சந்தீப் சிங் தெளிவாகக் கூறியுள்ளார். அத்தகைய பயிற்சியாளர்களை கண்காணிக்க பறக்கும் குழு உருவாக்கப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய அரசின் இந்த பறக்கும் குழுவால் எந்த மாவட்டத்திலும் எந்த நேரத்திலும் சோதனை செய்ய முடியும் என தகவல்கள் கிடைகிறது. இந்த சோதனையின் போது ஒரு கவனக்குறைவான பயிற்சியாளர் கண்டுபிடிக்கப்பட்டால், அவர் எந்த சூழ்நிலையிலும் விடுவிக்கப்பட மாட்டார் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

சோனேபாட்டில் உள்ள லிட்டில் ஏஞ்சல்ஸ் பள்ளியின் விளையாட்டு விழாவிற்கு வருகை புரிந்த விளையாட்டு அமைச்சர் சந்தீப் சிங் இந்த அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு சென்றார்.

நிகழ்ச்சியில் பேசிய அவர், விளையாட்டுக் கொள்கையை மேலும் மேம்படுத்த முதல்வருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும், அதற்கான புதிய திட்டம் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் சந்தீப் சிங் தெரிவித்துள்ளார். இதனால் எந்த வீரரையும் இழக்க நேரிடாது, இது வீரர்களின் மன உறுதியை அதிகரிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

இந்தியாவில் விளையாட்டுக் கொள்கை ஏற்கனவே நன்றாக இருப்பதாக குறிப்பிட்ட அவர், அதை மேலும் சிறப்பாகச் செய்ய முடியும் என்றும், அதற்காக வீரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் சந்தீப் சிங் கூறினார். 

வாய்ப்பு கிடைக்காத விளையாட்டு வீரர்களுக்கு வேலை கொடுக்கும் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அதற்கான பணி விரைவில் தொடங்கப்படவுள்ளது எனவும் அவர் தெரிவித்தார். இதற்காக, விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ் காலியாக உள்ள பதவிகளுக்கான அனைத்து துறைகளிடமிருந்தும் தகவல் கோரப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

விளையாட்டு மைதானம் தேவைப்படும் மாநிலத்தின் எந்த மாவட்டத்திலும், விளையாட்டு மைதானம் அபிவிருத்தி செய்யப்படும் என்று விளையாட்டு அமைச்சர் சந்தீப் சிங் கூறினார். இதற்கான தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன, இந்த பணி விரைவில் முடிக்கப்படும். அதன் பிறகு, விளையாட்டு மைதானங்களை உருவாக்கும் பணிகள் தொடங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

சோனிபட்டில் தொழில்துறை பகுதியில் பெண்கள் ஹாக்கி மைதானம் இருப்பதாக குறிப்பிட்ட சிங், அங்கு பல சிக்கல்கள் இருப்பதாகவும் ஒப்புக்கொண்டார். இருந்த போதிலும், பெண்கள் அந்த மைதானத்தில் பயிற்சி பெற்று வெளியே சென்று இந்திய அணிக்காக விளையாடுகிறார்கள் எனவும் பெருமிதம் தெரிவித்தார். மேலும் விரைவில் இந்த மைதானம் மேம்படுத்தப்படும், மேலும் அதிகமான பெண்கள் அங்கிருந்து இந்திய அணிக்கு செல்வார்கள் எனவும் உறுதி தெரிவித்தார்.

---விளையாட்டு பல்கலைக்கழகத்திற்கான புதிய திட்டம்---

ராய் விளையாட்டுப் பள்ளி சில காலங்களுக்கு முன்பு விளையாட்டு பல்கலைக்கழகமாக மாற்றப்பட்டது, ஆனால் பல்கலைக்கழகத்தின் வசதிகள் மற்றும் கல்வி இன்னும் அங்கு கிடைக்கவில்லை என்று விளையாட்டு அமைச்சர் சந்தீப் சிங் கூறினார். இது தனது கவனத்திற்கு வந்துவிட்டது என்றும், அதற்கான பணிகள் உடனடியாக தொடங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

Trending News