மும்பையில் தொடரும் கனமழை! அவதியில் பொதுமக்கள்!

மும்பையில் தொடரும் கனமழை காரணமாக புறநகர் உட்பட பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. 

Last Updated : Jul 8, 2018, 02:36 PM IST
மும்பையில் தொடரும் கனமழை! அவதியில் பொதுமக்கள்! title=

மும்பையில் தொடரும் கனமழை காரணமாக புறநகர் உட்பட பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. 

 

 

 

 

 

 

 

 

மும்பையில் பலத்த மழை பெய்து வருவதால் சாலைப் போக்குவரத்தும், ரயில் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. கனமழை காரணத்தால் மும்பை நகரின் தாழ்வான பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. மும்பையில் உள்ள சியான் காவல்நிலையம் அமைந்துள்ள பகுதி முற்றிலும் வெள்ளத்தில் மிதக்கிறது.

இதனால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மும்பை புறநகர் பகுதியிலும், அதனை ஒட்டியுள்ள பிற மாவட்டங்களிலும் இன்று காலை முதல் கனமழை பெய்து வருகிறது. மும்பையில் கொட்டி வரும் மழையின் காரணத்தால் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் வாகனங்கள் ஊர்ந்து செல்வதால் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. 

மான்குர்ட் பகுதியில் ஒருவர் மின்னல் தாக்கி பலியானதாகவும், சுற்றுலா சென்ற 5 பேரைக் காணவில்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

மும்பையில் மேலும் 5 நாட்களுக்கு கனமழை தொடரும் என அகில இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.

Trending News