நீங்கள் பிரிட்டிஷ் குடிமகனா? ராகுலிடம் விளக்கம் கேட்டு உள்துறை அமைச்சகம் நோட்டீஸ்

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் இரட்டை குடியுரிமை தொடர்பான விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தி உள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 30, 2019, 02:21 PM IST
நீங்கள் பிரிட்டிஷ் குடிமகனா? ராகுலிடம் விளக்கம் கேட்டு உள்துறை அமைச்சகம் நோட்டீஸ் title=

டெல்லி: மக்களவை தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் இரட்டை குடியுரிமை தொடர்பான விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தி உள்ளது. 

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு இந்தியா மட்டுமின்றி இங்கிலாந்திலும் குடியுரிமை உள்ளது என  மாநிலங்களவை உறுப்பினருமான சுப்பிரமணியன் சுவாமி உள்துறை அமைச்சகத்திடம் புகார் அளித்துள்ளார். அதில், 

2003 ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் பேக்ஆப்ஸ் என்ற பெயரில் ஒரு நிறுவனம் தொடங்கப்பட்டது. அந்த நிறுவனத்தின் இயக்குநர் மற்றும் செயலாளராகளில்  ராகுல் காந்தியும் ஒருவர். மேலும் அந்த நிறுவனத்தின் 83% பங்குகளை ராகுல் காந்தி வைத்திருப்பதாவும் குறிப்பிடப்பட்டுள்ளார். அந்த நிறுவம் 51, சவுத்கேட் தெரு, வின்செஸ்டர், ஹாம்ப்ஷேர் என்ற முகவரியில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அதில் ராகுல் காந்தி இங்கிலாந்து குடிமகன் என்று குறிப்பிட்டுள்ளதாகவும் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமியின் புகாரை அடுத்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு இரட்டை குடியுரிமை தொடர்பாக 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என உள்துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Trending News