புது தில்லி: டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் பாரத் பச்சாவ் (பாரதத்தை காப்போம்) என்ற பேரணி ராகுல் தலைமையில் காங்கிரஸ் (Congress) கட்சி நடத்தியது. இந்த பேரணியில் ராகுல் காந்தி, சோனியா காந்தி, மன்மோகன் சிங், பிரியங்கா காந்தி வாத்ரா, ப.சிதம்பரம் உள்ளிட்ட கட்சியின் மூத்த தலைவர்கள் அனைவரும் கலந்துக் கொண்டனர். பாரதத்தை காப்போம் பேரணியில் முக்கிய தலைவர்கள் உரையாற்றினார்கள். அவர்களின் உரை முழுவதும் மோடி தலைமையிலான மத்திய அரசு மீதான தாக்குதலாக இருந்தது.
பாரதத்தை காப்போம் பேரணியில் உரையாற்றிய காங்கிரஸ் கட்சின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வாத்ரா பேசுகையில், இந்தியாவை காப்பாற்ற நாடு முழுவதும் இருந்து மக்கள் இன்று இங்கு கூடியுள்ளனர். ஒவ்வொரு பஸ் நிறுத்தத்திலும், ஒவ்வொரு செய்தித்தாளிலும், ஒவ்வொரு தொலைக்காட்சி சேனலிலும், "மோடி ஹை தோ மும்கின் ஹை" (மோடியின் தலைமையில் எல்லாம் சாத்தியம்) என்ற விளம்பரத்தை காணலாம். அவர்கள் செய்த பல சாதனைகள் என்னவென்றால், அவர்கள் ஆட்சியில் வெங்காயம் ரூ.100 கிலோ ஆவது சாத்தியம். பாஜக ஆட்சி இருந்தால் 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையின்மைக்கு சாத்தியமாகும். பாஜக ஆட்சி இருப்பதால் 15 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ள முடியும் என கடுமையாக சாடினார்.
மேலும் பேசிய அவர், பாஜக இருந்தால், இதுபோன்ற அரசியலமைப்புக்கு எதிரான சட்டங்களை கொண்டு வருவார்கள். இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் நான் சொல்ல விரும்புகிறேன். உங்கள் குரலை உயர்த்துங்கள். நீங்கள் இந்த நாட்டை நேசிக்கிறீர்கள். உங்கள் குரல் நாட்டை நேசிக்கும் குரலாக இருக்கட்டும். நாம் குரலை எழுப்பவில்லை என்றால், அமைதியாக இருந்தால் நமது புரட்சிகர அரசியலமைப்பு அழிக்கப்படும். நாட்டின் பிளவு தொடங்கும் எனக் கூறினார்.
"அநீதிகளின் வழிபாட்டுக்கு" கடுமையான தாக்குதலைத் தொடுத்த அவர், இன்று நிலவும் சூழ்நிலையை எதிர்த்துப் போராடாதவர்கள் வரலாற்றில் கோழைகளாக இறங்குவார்கள் என்றும் கூறினார். இந்த நாடு நம்முடையது, அதைக் காப்பாற்றுவது நாமது தார்மீகக் கடமை எனவும் கூறினார்.
அதேநேரத்தில் "பாரதத்தை காப்போம்" பேரணியில் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தியும் பாஜக மீது கடுமையான தாக்குதல் நடத்தினார்.
உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.