இந்தியாவில் இறுதி கட்டத்தை எட்டியது 'Connections 2019'!

ஆந்திரா மற்றும் தெலங்கானாவின் இந்தியன் இன்ஸ்டிடூட் ஆப் மாஸ் கம்யூனிகேஷனின் முன்னாள் மாணவர்கள் ஒருங்கினைப்பு ஐதராபாத்தின் மாரியூடில் ‘Connections 2019’ என்ற பெயரில் நடத்தப்பட்டது!

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 16, 2019, 04:28 PM IST
இந்தியாவில் இறுதி கட்டத்தை எட்டியது 'Connections 2019'! title=

ஐதராபாத்: ஆந்திரா மற்றும் தெலங்கானாவின் இந்தியன் இன்ஸ்டிடூட் ஆப் மாஸ் கம்யூனிகேஷனின் முன்னாள் மாணவர்கள் ஒருங்கினைப்பு ஐதராபாத்தின் மாரியூடில் ‘Connections 2019’ என்ற பெயரில் நடத்தப்பட்டது!

முன்னாள் மாணவர்களின் இந்த சந்தீப்பில் தலைவர் மாதவி நாயுடு, பொதுச்செயலாளர் விவேக் மான்சேர், பொருளாலர் சந்திஷ்வர்ப் சாமந்திரை மற்றும் செயலாளர் நிஷா சிங் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

நிகழ்ச்சியல் பேசிய IIMCAA தேசிய செயலாளர் ரிதிஷ் வர்மா தெரிவிக்கையில்., IIMC மருத்துவ உதவி நிதியாக ரூ.5 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது, இந்த நிதி மாணவர்களின் மருத்துவ உதவிக்கு தேவைப்படும்போது பயன்படுத்தப்படும், நிதி நிலையில் பின்தங்களிய பத்து மாணவர்கள் தேர்ந்தெடுகப்பட்டு அவர்களுக்கு தலா ரூ.25000 உதவி தொகையாக அளிக்கப்படும் என தெரிவித்தார்.

IIMC Alumni meet

இந்நிகழ்ச்சியில் முன்னாள் மூத்த மாணவர்கள் அன்சுல் சுக்லா, சரத் லஹாங்கீர், ராஜேஷ் பாரிடா, சேத்தன் மாலிக், சுசித்திரா பட்நாயிக், அகன்ஷா சுக்லா, ஜோதி பிரகாஷ் மஹோப்த்ரா, தீப்தி பதானி, அனன்யா மோதிரா, பிரதாப் உப்தியா, சிரீஸ் சந்திரா சிங் மற்றும் சைத்தன்யா கிருஷ்ணராஜூ ஆகியோரும் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.

IIMC முன்னாள் மாணவர்களின் சந்திப்பான Connections, 2013-ஆம் ஆண்டு துவங்கி நடைப்பெற்று வருகிறது. இந்தியாவின் 21 நகரங்களிலும், வெளிநாடுகளிலும் நடத்தப்படும் இந்த நிகழ்ச்சி தற்போது இந்தியாவில் இறுதி கட்டத்தை எட்டி ஐதிராபாதில் நிகழ்ந்துள்ளது. இந்த தொடர் நிகழ்ச்சியின் இறுதி நிகழ்ச்சி பங்களாதேஷ் மாநிலம் டாக்கவில் நடைபெறவது குறிப்பிடத்தக்கது.

Trending News