லாக்டௌன் முதல் தடுப்பு மருந்து வரை: PM-CMs மெய்நிகர் சந்திப்பில் நடந்தது என்ன

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே, குஜராத் முதல்வர் விஜய் ரூபானி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெஹ்லோட், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் ஆகியோர் இந்த சநிப்பில் கலந்து கொண்டனர்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 24, 2020, 01:18 PM IST
  • எட்டு மாநிலங்களின் முதலமைச்சர்களுடன் பிரதமர் சந்திப்பு.
  • மூன்றாவது அலையின் தீவிரத்தன்மை மாசுபாடு உள்ளிட்ட பல காரணிகளால் அதிகமாகிறது-கெஜ்ரிவால்.
  • தடுப்பு மருந்து திட்டத்தை செயல்படுத்துவதற்கும் மாநிலம் ஒரு பணிக்குழுவை உருவாக்கியுள்ளது-உத்தவ் தாக்ரே.
லாக்டௌன் முதல் தடுப்பு மருந்து வரை: PM-CMs மெய்நிகர் சந்திப்பில் நடந்தது என்ன  title=

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை எட்டு மாநிலங்களின் முதலமைச்சர்களுடன் மெய்நிகர் சந்திப்பை நடத்தினார். COVID-19 தொற்றானது பண்டிகை காலத்திற்குப் பிறகு திடீரென உயர்ந்துள்ளது பற்றியும் கொரோனா வைரஸ் தொற்றுநோயால் எழும் நிலைமை குறித்தும் இந்த சந்திப்பில் விவாதிக்கப்பட்டது.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே, குஜராத் முதல்வர் விஜய் ரூபானி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெஹ்லோட், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் ஆகியோர் இந்த சநிப்பில் கலந்து கொண்டனர். உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் (Amit Shah) இதில் கலந்து கொண்டார்.

COVID-19 நிலைமை டிசம்பரில் மோசமடையக்கூடும் என்றும் அதை எதிர்த்துப் போராட அனைத்து மாநிலங்களும் தயாராக இருக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுக் கூறிய ஒரு நாள் கழித்து இந்த சந்திப்பு நடந்துள்ளது.

"அனைத்து மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் தொற்றை கட்டுப்படுத்துவது தொடர்பான உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று நாங்கள் கருதுகிறோம். சுட்டிக்காட்டப்பட்டபடி, நிலை அறிக்கை இன்று முதல் இரண்டு நாட்களுக்குள் தாக்கல் செய்யப்பட வேண்டும். இந்த விவகாரம் 2020 நவம்பர் 27 அன்று பரிசீலிக்கப்படுவதற்கும் பொருத்தமான உத்தரவுகளை வழங்குவதற்கும் பட்டியலிடப்படட்டும்” என்று உயர் நீதிமன்றம் கூறியது.

முதலமைச்சர்கள் என்ன கூறினார்கள்:

டெல்லி: டெல்லியில், கோவிட் தொற்றின் மூன்றாவது அலையில், நவம்பர் 10 ஆம் தேதி அதிகபட்சமாக 8600 பேர் COVID-19 தொற்றால் பாதிக்கப்பட்டனர் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் (Arvind Kejriwal) பிரதமர் மோடிக்கு தெரிவித்தார். அப்போதிருந்து தொற்றின் அளவு மற்றும் நேர்மறை விகிதம் படிப்படியாக குறைந்து வருகின்றன. மூன்றாவது அலையின் தீவிரத்தன்மை மாசுபாடு உள்ளிட்ட பல காரணிகளால் அதிகமாகிறது.

ALSO READ: ஸ்பூட்னிக்-V மலிவான விலையில் COVID தடுப்பூசியை வழங்கும், விலை என்ன தெரியுமா?

அருகிலுள்ள மாநிலங்களில் விவாசாய எச்சங்களை எரிப்பதால் டெல்லியில் ஏற்படும் மாசுபாடு குறித்து பிரதமருக்கு நினைவூட்டிய கெஜ்ரிவால் இதில் பிரதமரின் தலையீட்டையும் நாடினார். சமீபத்தில்தான் இந்த மாநிலங்களில் பயோ டீகம்போசர்கள் அளிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. மூன்றாவது அலை நீடிக்கும் வரை மத்திய அரசு மருத்துவமனைகளில் கூடுதலாக 1000 ஐ.சி.யூ படுக்கைகளை ஒதுக்குமாறு அவர் பிரதமர் மோடியை (PM Modi) கேட்டுக் கொண்டார்.

மகாராஷ்டிரா: சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் (SII) ஆதார் பூனவல்லாவுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், சரியான நேரத்தில் தடுப்பு மருந்து விநியோகிப்பதை உறுதி செய்வதற்கும், தடுப்பு மருந்து திட்டத்தை செயல்படுத்துவதற்கும் மாநிலம் ஒரு பணிக்குழுவை உருவாக்கியுள்ளது என்றும் மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே பிரதமர் நரேந்திர மோடிக்கு தெரிவித்தார்.

ALSO READ: நம் நாட்டில் உருவாக்கப்படும் COVID Vaccine-ன் இறுதி கட்ட சோதனைகள் விரைவில் முடியும்: Harsh Vardhan

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News