சீரியல் கில்லர்... தந்தையே தனது குழந்தைகளை கொன்ற கொடூரம்..!!!

ஹரியானாவில்,  சீரியல் கில்லாரான தந்தை கடந்த 4 ஆண்டுகளில் 5 குழந்தைகளை கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 25, 2020, 05:52 PM IST
    குற்றம் சாட்டப்பட்டவர், ஜும்மா தின், தனது 5 குழந்தைகளையும், கொன்றதை ஒப்புக்கொண்டார்.
    அவரது வீட்டிற்கு அருகில் உள்ள ஒரு கால்வாயிலிருந்து 2 சிறுமிகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
    குற்றம் சாட்டப்பட்டவரின் மனைவி ஆறாவது முறையாக கர்ப்பமாக உள்ளார்.
சீரியல் கில்லர்... தந்தையே தனது குழந்தைகளை கொன்ற கொடூரம்..!!! title=

ஹரியானாவில், பெற்ற குழந்தைகளை தானே கொலை செய்த தந்தை, குழந்தைகள் காணாமல் போய் விட்டதாக போலீஸில் புகார் அளித்துள்ளார். 

போலீஸாரிடம் புகார் அளித்த ஐந்து நாட்களுக்குப் பிறகு, ஜூலை 20 ஆம் தேதி, தித்வாரா கிராமத்தில் உள்ள அவரது வீட்டிற்கு அருகில் இருந்த கால்வாயிலிருந்து அவரது 11 மற்றும் 7 வயதுடைய இரண்டு மகள்களின் சடலங்களை போலீசார் மீட்டனர்.

சண்டிகர்: கடந்த நான்கு ஆண்டுகளில் தனது ஐந்து குழந்தைகளை கொலை செய்ததாக ஒப்புக்கொண்ட 38 வயது நபர் ஹரியானாவின் ஜிந்த் மாவட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜும்மா என்று மட்டுமே அடையாளம் காணப்பட்ட அந்த நபர், ஒரு தொழிலாளி மற்றும் ஜிந்தில் உள்ள சஃபிடோனில் வசிப்பவர். குற்றம் சாட்டப்பட்டவரின் மனைவி ஆறாவது முறையாக கர்ப்பமாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கர்ப்பமாக இருந்த தனது மனைவியை அவர் கடந்த சில நாட்களாக அதிகமான் தூக்க மருந்து கொடுத்து, கடும் மயக்கத்தில் வைத்திருந்தார்.

தனது குழந்தைகள் காணாமல் போய் விட்டதாக அளித்த புகார் தொடர்பாக நடத்திய விசாரணையின் போது, ​​குற்றம் சாட்டப்பட்டவர், முன்னுக்கு பின் முரணாக பேசியது போலீஸாருக்கு சந்தேகத்தை கொடுத்தது.  ஆனால், ,அவர் தனது குழந்தைகளை பறி கொடுத்த சோதத்தில்  இருப்பதால், குழப்பமாக பேசுகிறார் என நினைத்து, அவரை தொடர்ந்து விசாரணைக்கு உட்படுத்தவில்லை.

பின்னர் கிராம பஞ்சாயத்து விசாரணையில் ஈடுபட்டது. அந்த நபர் தனது ஐந்து குழந்தைகளை கொன்றதாக அவர்கள் முன் ஒப்புக்கொண்டார், பின்னர் போலீசார். ஜும்மா தனது இரண்டு மைனர் மகள்களுக்கு போதை மருந்து கொடுத்து சில நாட்களுக்கு முன்பு கால்வாயில் எறிந்ததாக ஒப்புக்கொண்டார், ASP கூறினார்.

ALSO READ | IAF Western Air Command தலைவராக நியமிக்கப்படுகிறார்  ஏர் மார்ஷல் வி.ஆர். சவுத்ரி

முன்னதாக, குற்றம் சாட்டப்பட்டவரின் மூன்று குழந்தைகளும், மர்மமான முறையில் இறந்துவிட்டனர். அவர்கள் அனைவரும் 11 வயதிற்கு உட்பட்டவர்கள்.  அதில் ஒரு மகன் தூக்கத்தில் இறந்துவிட்டார், ஒரு மகள் விளையாடும்போது இறந்துவிட்டார், மற்றொரு மகன் ஒருநாள் வாந்தியெடுக்கத் தொடங்கினார், அதற்கு பிறகு அவர்கள் இறந்தார்கள் என்று அவர் தனது அண்டை வீட்டில் உள்ளவர்களிடன் தெரிவித்திருந்தார்.

அவர் தனது ஐந்து குழந்தைகள், அதாவது,  மூன்று மகள்கள் மற்றும் இரண்டு மகன்களைக் கொன்றதை ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். அவர்களில் இருவர் அவரால் கழுத்தை நெரித்துக் கொல்லப்பட்டனர், ஒருவருக்கு விஷ மாத்திரை  கொடுத்தேன் என போலீஸாரிடம் ஒப்புக் கொண்டார்.

ALSO READ | தண்டனையைத் தவிர்க்க போலி மரண சான்றிதழ்.. எழுத்து பிழையால் சிக்கிய பரிதாபம்..!!!

குற்றம் சாட்டப்பட்ட இந்த நபர், தான் பெற்ற குழந்தைகளை வரிசையாக கொல்ல காரணம் என்ன என்பதை அறிய, காவல்துறையினர் இந்த வழக்கில் ஒரு மனநல மருத்துவரின் உதவியை நாட உள்ளனர். 

Trending News