இனி யாரும் காலேஜ் போகுரப்ப ஜீன்ஸ் & டி-சர்ட் போடக்குடாது!

ராஜஸ்தானில் கல்லூரி மாணவ, மாணவிகள் இனி ஜீன்ஸ்-டி சர்ட் அணிய தடை செய்துள்ளனர். 

Last Updated : Mar 6, 2018, 10:52 AM IST
இனி யாரும் காலேஜ் போகுரப்ப ஜீன்ஸ் & டி-சர்ட் போடக்குடாது! title=

கல்லூரி மாணவ- மாணவிகளுக்கு ஆடை கட்டுப்பாடு அவ்வளவாக கிடையாது. என்ஜினீயரிங் கல்லூரிகளில் ஆடை கட்டுப்பாடு உள்ளது. அரசு மற்றும் கலை கல்லூரிகளில் மாணவ - மாணவிகள் ஜீன்ஸ், டி சர்ட் என தங்கள் கஷ்டத்துக்கு ஏற்ப ஆடை அணிந்து வருகிறார்கள்.

இந்த நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் அனைத்து கல்லூரிகளிலும் மாணவ- மாணவிகளுக்கு ஆடை கட்டுப்பாடு விதிக்கப்பட்டு இருக்கிறது.அதன்படி கல்லூரிக்கு மாணவ - மாணவிகள் ஜீன்ஸ், டி சர்ட் அணிந்து வர தடை விதிக்கப்பட இருக்கிறது.

மாணவர்கள் சட்டை, பேண்ட், ஷூ, பெல்ட் மற்றும் குளிர்காலத்தில் ஸ்வெட்டர் அணியலாம். மாணவிகள் சல்வார், துப்பட்டா, புடவை, ஷூ அல்லது செருப்பு மற்றும் குளிர்காலத்தில் ஸ்வெட்டர் அணியலாம்.

ஒவ்வொரு கல்லூரி நிர்வாகமும் மாணவ- மாணவிகள் ஒரே மாதிரியான எந்த கலரில் சீருடை அணிய வேண்டும் என்பதை மாணவ அமைப்புகளுடன் ஆலோசித்து தீர்மானித்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து உயர்கல்வி அமைச்சர் கிரண் மகேஸ்வரி கூறும்போது, “மாணவர்களுக்கான ஆடை கட்டுப்பாடு ஒற்றுமை, ஒழுக்கம், தனித்தன்மையை கொடுக்கும்.என்ஜினீயரிங் கல்லூரி மற்றும் பல்கலைக் கழகங்களில் ஆடை கட்டுப்பாடு பின்பற்றப்படுகிறது. அதே போன்று அரசு கல்லூரிகளிலும் பின்பற்ற வேண்டும்.

ஆனால் எதிர்க்கட்சியான காங்கிரஸ் குற்றம்சாட்டி இருக்கிறது. ஆடை கட்டுப்பாடு வி‌ஷயத்தில் பா.ஜனதா அரசு ஆர்.எஸ்.எஸ். கொள்கைகளை புகுத்த முயற்சிக்கிறது என்று கூறி இருக்கிறது.

Trending News