இந்தியா கனடா மோதல்: அடிவாங்கும் பொருளாதாரம், கண்டுகொள்ளாத அமெரிக்கா.... குழம்பும் கனடா!!

India Canada Issue: இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையில் அதிகரிக்கும் பதற்றமான சூழலால், பொருளாதார ரீதியாக கனடா அதிகம் பாதிக்கப்படப் போகிறது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Sep 23, 2023, 02:51 PM IST
  • கனடாவில் பல துறைகளில் இந்தியர்கள் முன்னணியில் உள்ளனர்.
  • கடனாவில் அதிகம் இருப்பது இந்திய மாணவர்களே.
  • இந்திய வம்சாவளி மக்கள் ஒவ்வொரு ஆண்டும் ரூ.50 ஆயிரம் கோடிக்கு மேல் முதலீடு செய்கின்றனர்.
இந்தியா கனடா மோதல்: அடிவாங்கும் பொருளாதாரம், கண்டுகொள்ளாத அமெரிக்கா.... குழம்பும் கனடா!! title=

கனடா-இந்தியா உறவுகள்: இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையிலான இராஜ்ஜீய உறவுகள் பதற்றமான கட்டத்தில் உள்ளன. இத்தகைய சூழ்நிலையில் இரு நாடுகளின் வர்த்தகத்திலும் அதிக பாதிப்புகளும், நஷ்டமும் ஏற்பட வாய்ப்புள்ளது. குறிப்பாக கனடா இதில் அதிகம் பாதிக்கப்படப் போகிறது. ஏனெனில் அங்குள்ள பல துறைகளிலும் வணிகங்களிலும் இந்தியர்களின் பங்களிப்பு அதிகமாக உள்ளது.

கனடாவின் பொருளாதாரத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் இந்தியர்கள் ரூ.3 லட்சம் கோடி பங்களிப்பை வழங்குகிறார்கள் என ஊடக அறிக்கைகள் கூறுகின்றன. இந்தியா கனடா இடையே உருவாகியுள்ள பதற்றமான சூழ்நிலையால் கனடாவின் பொருளாதாரம் பெரும் பாதிப்பை சந்திக்க நேரிடும் என பொருளாதார நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர். அங்கு 20 லட்சம் இந்தியர்கள் பொருளாதாரத்தின் அனைத்து துறைகளிலும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இந்தியாவில் இருந்து கனடாவுக்கு படிக்கச் செல்லும் 2 லட்சம் மாணவர்களின் கட்டணத்தில் மட்டும் ரூ.75 ஆயிரம் கோடி பங்களிப்பு பெறப்படுகிறது.

கனடாவில் இந்தத் துறைகளில் இந்தியர்கள் முன்னணியில் உள்ளனர்

இந்தியாவில் வாழும் மக்கள் கனடாவில் சொத்து, தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி, பயணம் மற்றும் சிறு வணிகம் ஆகிய துறைகளுக்கு அதிக பங்களிப்பை வழங்குகிறார்கள். கனடாவில் சொத்து விஷயங்களில் இந்தியர்கள் அதிக முதலீடு செய்கிறார்கள். சீனா இரண்டாவது இடத்தில் உள்ளது. வான்கூவர், கிரேட்டர் டொராண்டோ, பிராம்ப்டன், மிசிசாகா மற்றும் ஒன்டாரியோவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் இந்திய வம்சாவளி மக்கள் ஒவ்வொரு ஆண்டும் ரூ.50 ஆயிரம் கோடிக்கு மேல் முதலீடு செய்கின்றனர்.

இந்திய நிறுவனங்கள் 2023-ம் ஆண்டுக்குள் கனடாவில் ரூ.41 ஆயிரம் கோடி முதலீடு செய்து 17 ஆயிரம் வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளதாக சிஐஐ அறிக்கை தெரிவிக்கின்றது. பயண விவரங்களைப் பொறுத்தவரை, ஆண்டுதோறும் ஏராளமான இந்தியர்கள் கனடாவுக்கு செல்கின்றனர். 2022 ஆம் ஆண்டில், 1.10 லட்சம் இந்தியர்கள் தங்கள் சொந்த நாட்டுக்கு பயணம் செய்துள்ளனர். இது தவிர மளிகை பொருட்கள், உணவகங்கள் போன்ற சிறு வணிகங்களில் இந்தியர்கள் சார்பில் ரூ.70 ஆயிரம் கோடி முதலீடு செய்யப்படுகிறது.

மேலும் படிக்க | இந்தியாவை கனடா குற்றம்சாட்ட இதுதான் காரணம்: அதிர்ச்சி ரிப்போர்ட்

கடனாவில் அதிகம் இருப்பது இந்திய மாணவர்களே

ஒவ்வொரு ஆண்டும் கனடாவில் படிக்கச் செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இருப்பினும், இந்த முறை சர்ச்சை காரணமாக விசா மற்றும் பிற வேலைகளில் தாமதம் காரணமாக இந்த எண்ணிக்கை குறையக்கூடும். மறுபுறம், இதனால் கனடா கட்டணமாக பெறும் தொகையில் இழப்பை சந்திக்க நேரிடலாம்.

அமெரிக்காவின் நிலைபாடு என்ன?

இந்தியா மீது குற்றம் சாட்டி ஜஸ்டின் ட்ரூடோ மிகப்பெரிய தவறை செய்துள்ளார் என்ன பென்டகன் முன்னாள் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஜஸ்டின் ட்ரூடோவின் குற்றச்சாட்டுகள் இந்தியாவை விட கனடாவுக்கு அதிக ஆபத்தை ஏற்படுத்துவதாக பென்டகன் முன்னாள் அதிகாரி மைக்கேல் ரூபின் கூறினார். இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையில் யாரை ஆதரிக்க வேண்டும் என்பதை அமெரிக்கா தேர்ந்தெடுக்க வேண்டும் என்றால், அமெரிக்கா இந்தியாவைத்தான் தேர்ந்தெடுக்கும் என்று தான் நினைப்பதாக அவர் தெரிவித்தார். 

தூதாண்மை ரீதியாக இந்தியா, கனடாவை விட அமெரிக்காவின் மிக முக்கியமான நட்பு நாடு என்றும், இந்தியாவுடன் கனடா சண்டையிடுவது யானைக்கு எதிராக எறும்பு சண்டையிடுவது போன்றது என்றும் அவர் கூறினார். இந்தியாவுக்கு எதிரான ஜஸ்டின் ட்ரூடோவின் குற்றச்சாட்டுகளை குறிப்பிட்டு, அவர் பிரதமராக நீண்ட காலம் நீடிக்க மாட்டார் என்றும் அவர் வெளியேறிய பிறகு அமெரிக்கா கனடாவுடனான தனது உறவை மீண்டும் சரிசெய்ய முடியும் என்றும் தெரிவித்தார். 

"பிரதமர் ட்ரூடோ மிகப்பெரிய தவறு செய்துவிட்டார். தன்னால் பின்வாங்க முடியாது என குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். அவரது குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை. அரசுக்கு எதிராக ஏதோ நடக்கிறது. இல்லையெனில், அரசாங்கம் ஏன் ஒரு பயங்கரவாதிக்கு அடைக்கலம் கொடுத்தது என்பதை அவர் விளக்க வேண்டும்" என்று முன்னாள் பென்டகன் அதிகாரி கூறினார்.

மேலும் படிக்க | பயங்கரவாதிகளுக்கு 'பாதுகாப்பான புகலிடமாக' கனடா மாறி வருகிறது: இந்தியா

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News