புதுடில்லி: பிரதமர் நரேந்திர மோடி (Prime Minister Narendra Modi) தலைமையிலான அரசு 2024 -க்குள் இந்தியாவின் பொருளாதாரத்தை ஐந்து டிரில்லியன் டாலராக உயர்த்த வேண்டும் என்ற அடிப்படியில் மத்திய அரசு பல முயற்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது. மத்திய அரசின் பொருளாதார இலக்கைக் குறித்து பேசிய இந்திய பாதுகாப்பு மந்திரி (Defence Minister) ராஜ்நாத் சிங் (Rajnath Singh), இந்தியா எடுத்து வரும் நடவடிக்கை திறமைகளை வைத்து பார்த்தால், இன்னும் 10-15 ஆண்டுகளில் 10 டிரில்லியன் டாலர் (10 Trillion Dollar Economy) பொருளாதாரம் கொண்ட நாடக இந்தியா (India) மாறுவோம் என்று கூறியுள்ளார்.
பிரதமர் மோடி 2024 ஆண்டுக்குள் 5 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை நிர்ணயித்துள்ளார். ஆனால் நம்மிடம் உள்ள திறமையால், 10-15 ஆண்டுகளில் அதை 10 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றுவோம் என்று நான் நினைக்கிறேன் என்று ராஜ்நாத் சிங் "டெஃப்-கனெக்ட்" (Def-Connect) நிகழ்சியில் கலந்துக் கொண்டு பேசிய போது கூறினார்.
2025 ஆம் ஆண்டில் இந்திய பாதுகாப்புத் துறையை (Indian Defence Industry) 26 பில்லியன் டாலர் மதிப்பை அடைய பாதுகாப்பு உற்பத்தியில் தனியார் துறையின் பங்களிப்பை அதிகரிக்கவும், அதற்கான நடவடிக்கைகள் விரைந்து முடிக்க முயற்சிகள் நடந்து வருகிறது என்று கடந்த மாதம் ராஜ்நாத் சிங் கூரியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றுவதற்கான மத்திய அரசாங்கத்தின் நோக்கத்தில் பாதுகாப்புத் துறை முக்கிய பங்கு வகிக்கும். உலகத் தரம் வாய்ந்த பாதுகாப்புத் துறையை சார்ந்த உபகரணங்களை உள்நாட்டில் தயாரிக்கவும், அதன் மூலம் இறக்குமதியை குறைப்பதும் தான் எங்களின் முக்கிய நோக்கம் என்று 22 வது இந்தியா சர்வதேச பாதுகாப்பு எக்ஸ்போ, 2019 (22nd India International Security Expo, 2019) தொழில்துறை தலைவர்களில் மத்தியில் உரையாற்றினார்.
முன்னதாக, கடந்த சனிக்கிழமை (நவம்பர் 9) அன்று, அயோத்தியா வழக்கின் தீர்ப்பினை தலைமை நீதிபதி ரன்சன் கோகாய் தலைமையிலான அரசியலமைப்பு பென்ச் அறிவித்தது. அந்த தீர்ப்பில், சர்ச்கைக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்டிக்கொள்ளலாம். இதற்காக 3 மாதங்களுக்குள் மத்திய அரசு ஒரு அறக்கட்டளையை ஏற்படுத்த வேண்டும். அதேபோல முஸ்லிம்களுக்கு மசூதி கட்டுவதற்கு வேறு இடத்தில் 5 ஏக்கர் நிலம் வழங்கப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அந்த தீர்ப்பை குறித்து பேசிய இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், அயோத்தி விவாகரத்தில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு வரலாற்று சிறப்பு வாய்ந்தது என்று கூறினார்.
மேலும் பேசிய அவர், உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை சமநிலையுடனும், மகத்துவத்துடனும் அனைவரும் எடுத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்றார். மேலும் நாட்டு மக்கள் அனைவரும் அமைதி காக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார் ஏமன[என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதி எஸ்.ஏ.போப்டே, நீதிபதி டி.ஒய் சந்திரசூட், நீதிபதி அசோக் பூஷண் மற்றும் நீதிபதி அப்துல் நசீர் என ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு வழங்கியது.