வடகொரியா போன்று ஒரே ஆட்சியை 50 ஆண்டு காலத்திற்கு ஏற்க இந்தியா ஒன்றும் சர்வதிகார நாடில்லை என காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சர்ஜ்வாலா தெரிவித்துள்ளார்!
முன்னதாக கடந்த செப்டம்பர் 8, 9 ஆகிய தேதிகளில் பாரதிய ஜனதா கட்சியின் 2 நாள் தேசிய செயற்குழு கூட்டம், டெல்லியில் நடைப்பெற்றது. பாஜக தலைவர் அமித்ஷா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தல் மற்றும் அதற்கு முன்னதாக நடைபெறவுள்ள 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இதற்கிடையில் இக்கூட்டத்தில் பேசிக பாஜக தலைவர் அமித் ஷா தெரிவிக்கையில்... வரும் 2019-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் பாஜக அமேக வெற்றிப் பெறும். அடுத்த 50 ஆண்டிற்கு பாஜக-வின் ஆட்சியை யாராலும் அசைக்க முடியாது என தெரிவித்துள்ளார். மேலும் இதனை நாங்கள் பெருமைக்காக சொல்லவில்லை, எங்கள் ஆட்சி செய்துவரும் நலப்பணிகளுக்காக மக்கள் அளிக்கும் பரிசாக வரவிருக்கும் தேர்தல் வெற்றியினை கருதுகிறோம் எனவும் குறிப்பிட்டார்.
அமித்ஷா அவர்களின் கருத்திற்கு பதில் அளிக்கும் வகையில், இன்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சர்ஜ்வாலா செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது...
LIVE: Press briefing by @rssurjewala, AICC Communications incharge. https://t.co/LXRu4ZbAzO
— Congress Live (@INCIndiaLive) September 11, 2018
"ஜனநாயகம் அற்ற முறையில் 50 ஆண்டுகள் ஆட்சி செய்ய நினைக்கும் பாஜக-விற்கு செல்லிக்கொள்ள விரும்புவது என்னவென்றால்... வடகொரியா போன்று ஒரே ஆட்சியை 50 ஆண்டு காலத்திற்கு ஏற்க இந்தியா ஒன்றும் சர்வதிகார நாடு இல்லை.
வடகொரியாவை போல் இந்தியாவை சர்வாதிகார ஆட்சிக்குள் கொண்டுவர நினைக்கும் பாஜக கனவு பலிக்காது. இந்திய மக்கள் விழிப்புணர்வு கொண்ட மக்கள். விரைவில் இந்திய மக்கள் பாஜக ஆட்சியை தூக்கியெறிவார்கள். வரும் 2019-ஆப் ஆண்டு பொதுத்தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றிப் பெற்று ஆட்சி அமைக்கும்" என குறிப்பிட்டுள்ளார்!