மாலத்தீவில் நிலவும் அரசியல் குழப்பம் மேலும் தீவிரமடைந்துள்ள நிலையில் இந்தியர்கள் அங்கு செல்ல வேண்டாம் என இந்திய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.
மாலத்தீவில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அப்துல்லா சயீது மற்றும் முன்னாள் அதிபர் மாமூன் அப்துல் கயூம் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் அங்கு மிகவும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதன்படி, அங்கு அனைத்து அடிப்படை உரிமைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் அவசர நிலைப் பிரகடனச் செய்தியை அதிபரின் உதவியாளர் அஜிமா சுக்குர், அரசு தொலைக்காட்சியில் வாசித்தார்.
இதையடுத்து, மாலத்தீவுக்கு யாரும் செல்ல வேண்டாம் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், அந்த நாட்டின் அரசியல் நெருக்கடியை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.