சர்வதேச யோகா தினம் : மோடி பங்கேற்பு

Last Updated : Jun 21, 2016, 11:15 AM IST
சர்வதேச யோகா தினம் : மோடி பங்கேற்பு title=

2-வது ஆண்டாக சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாடப்படுகிறது. 135 நாடுகளில் யோகா பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. சண்டிகாரில் நடந்த நிகழ்ச்சியில், 30 ஆயிரத்திற்கும் அதிகமானோருடன் பிரதமர் மோடி பல்வேறு யோகா பயிற்சியை செய்தார். 

பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளை ஏற்று, ஜூன் 21-ந் தேதியை சர்வதேச யோகா தினமாக ஐ.நா. பொதுச்சபை கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அறிவித்தது. கடந்த ஆண்டு, முதலாவது சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. இந்தியா மட்டுமின்றி, உலகின் பல நாடுகளிலும் அன்றைய தினம் யோகா பயிற்சி மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், 2-வது ஆண்டாக, இன்று சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது.

சண்டிகாரில் நடந்த நிகழ்ச்சியில், 30 ஆயிரத்திற்கும் அதிகமானோருடன் பிரதமர் மோடி பல்வேறு யோகா பயிற்சியை செய்தார். 45 நிமிடம் நடைபெற்ற யோகாவில் பிரதமர் பல்வேறு ஆசனங்களை செய்தார். முதல் முறையாக, 150 மாற்றுத்திறனாளிகளும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் மாற்று திறனாளிகளுக்கு சிறப்பு வசதி செய்யப்பட்டிருந்தது. 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். யோகா தினக் கொண்டாட்டங்களில் மத்திய அரசு ஊழியர்கள் விருப்பத்தின் பேரில் யோகா நிகழ்ச்சிகளில் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News