INX மீடியா வழக்கில் ஜாமீன் மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மேல்முறையீட்டு மனு தாக்கல்!!
INX மீடியா முறைகேடு தொடர்பாக சிபிஐ தொடர்ந்த வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து ப.சிதம்பரம் ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்கியது. ஆனால், ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளதால் ப.சிதம்பரம் சிறையில் இருந்த வெளியே செல்வதில் சிக்கல் நீடித்து வருகிறது.
Supreme Court agrees to hear an appeal of Congress leader P Chidambaram against Delhi High Court order refusing bail to him in INX Media money laundering case. A Bench headed by Chief Justice SA Bobde says it would hear the plea on Tuesday or Wednesday. (file pic) pic.twitter.com/lpDShPGUiN
— ANI (@ANI) November 18, 2019
இதனிடையே, ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் ஜாமீன் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்நிலையில், டெல்லி உயர்நீதிமன்றம் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நாளை அல்லது நாளை மறுநாள் விசாரிக்கப்படும் என தலைமை நீதிபதி பாப்டே அறிவித்துள்ளார்.