வானிலை சம்பந்தமான ஆராய்ச்சி மேற்கொள்ள இன்று செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட உள்ளது.
இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான இஸ்ரோ ஜி.எஸ்.எல்.வி. எப்-05 என்ற ராக்கெட் மூலம் இன்சாட்-3டி.ஆர். எனும் வானிலை ஆய்வுக்காக செயற்கைக்கோளை செலுத்த உள்ளது.
அதன்படி ஆந்திரா மாநிலத்தின் ஸ்ரீஹரிகோட்டாவில் அமைந்துள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து, இன்று மாலை இந்த செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட உள்ளது.
விண்ணில் செலுத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ள நிலையில், இதற்கான 29 மணி நேர கவுன்ட்டவுன் நேற்று காலை 11:10 மணிக்கு துவங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
வானிலை சம்பந்தமான ஆராய்ச்சி மேற்கொள்ளவே இந்த செயற்கைக்கோள் விண்ணில் செலுதப்படிகிறது. வானிலை சம்பந்தமான தகவல்களை இந்த செயற்கைக்கோள் நமக்கு அளிக்கும்.