இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் Vikram S வெற்றிகரமாக விண்ணில் சீறிப்பாய்ந்தது!

விக்ரம் எஸ் ராக்கெட்: ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் மூலம் தனியாரால் உருவாக்கப்பட்ட நாட்டின் முதல் ராக்கெட் ஆன விக்ரம் எஸ் ராக்கெட்டை இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியதால் இந்திய விண்வெளித் துறை இன்று மாபெரும் முன்னேற்றம் கண்டுள்ளது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Nov 18, 2022, 12:54 PM IST
  • நாட்டின் தனியாரால் உருவாக்கப்பட்ட முதல் ராக்கெட் ஆன விக்ரம்-எஸ்.
  • இந்தியா விண்வெளித் துறையில் மாபெரும் முன்னேற்றம் கண்டு வரலாறு படைத்துள்ளது.
  • 'பிராரம்ப்' என்ற தலைப்பில் பெயரிடப்பட்ட மிஷனின் கீழ் விண்ணில் செலுத்தப்பட்டது.
இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் Vikram S வெற்றிகரமாக விண்ணில் சீறிப்பாய்ந்தது! title=

விக்ரம் எஸ் ராக்கெட்: ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் மூலம் தனியாரால் உருவாக்கப்பட்ட நாட்டின் முதல் ராக்கெட் ஆன விக்ரம் எஸ் ராக்கெட்டை இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியதால் இந்திய விண்வெளித் துறை இன்று மாபெரும் முன்னேற்றம் கண்டுள்ளது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, நாட்டின் தனியாரால் உருவாக்கப்பட்ட முதல் ராக்கெட் ஆன விக்ரம்-எஸ் ராக்கெட்டை இன்று, நவம்பர் 18, 2022 அன்று ஏவியது. இந்திய விண்வெளித் ஸ்டார்ட் அப் நிறுவனமான ஸ்கைரூட் தயாரித்த விக்ரம்-எஸ் ராக்கெட் இன்று காலை 11.30 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள விண்வெளித் தளத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது. இந்த ஏவுதலின் மூலம் இந்தியா தனியார் விண்வெளித் துறையில் மாபெரும் முன்னேற்றம் கண்டு வரலாறு படைத்துள்ளது.

இஸ்ரோவின் நிறுவனர் விக்ரம் சாராபாயின் பெயரிடப்பட்ட விக்ரம் எஸ் ராக்கெட், இந்தியாவின் வளர்ந்து வரும் தனியார் விண்வெளித் துறையுடன் இஸ்ரோவின் உறவின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில் 'பிராரம்ப்' என்ற தலைப்பில் பெயரிடப்பட்ட மிஷனின் கீழ் விண்ணில் செலுத்தப்பட்டது.

மேலும் படிக்க |  சாதித்த இந்தியர்! $1 பில்லியன் வருவாயுடன் உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்த Zoho!

IN-Space தலைவர் டாக்டர் பவான் கோயங்கா, இது குறித்து கூறுகையில் “ தனியார் ராக்கெட் ஏவும் திட்டம் மிகப்பெரிய மைல்கல் ஆகும். ஏவு வாகனம், செயற்கைக்கோள், பேலோடு, ஏவுதளம் ஆகியவை உருவாக்க, ஏற்கெனவே 150 தனியார் நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க | G20 Summit: இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்குடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News