கர்நாடகா சட்டசபை தேர்தல் 2018: பெங்களூர் பேரணியில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்

பாரதிய ஜனதா பிரசார யாத்திரை பொதுக்கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று பெங்களூரு வருகிறார். இக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசுகிறார்.

Updated: Feb 4, 2018, 11:09 AM IST
கர்நாடகா சட்டசபை தேர்தல் 2018: பெங்களூர் பேரணியில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்
Pic Courtesy : Twitter/BJP

மாற்றத்துக்கான பயணம் என்ற பெயரில் கர்நாடக மாநிலம் முழுவதும் அந்தமாநில பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் எடியூரப்பா 90 நாட்களுக்கான பிரசார ரதயாத்திரை(நவ நிர்மான் பரிவர்த்தன் யாத்ரா) நடத்தி வருகிறார். 

இன்று நவ நிர்மான் பரிவர்த்தன் பிரசார ரதயாத்திரையின் பொதுக்கூட்டம் பெங்களூரு அரண்மனை மைதானத்தில் நண்பகல் 2 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள பிரதமர் மோடி அவர்கள் வருகிறார். 

கடந்த மாதம்(ஜனவரி) 28-ம் தேதி பிரசார ரதயாத்திரையின் பிரதமர் மோடி கலந்துக்கொள்ள திட்டமிட்டப்பட்டிருந்தது. ஆனால், ஜனவரி 29-ம் தேதி பாராளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடங்கியதாலும், பின்னர் பிப்ரவரி 1-ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதால், பிரதமர் அவர்களால் கடந்த ஞாயிற்றுக்கிழமை பேரணியில் கலந்து கொள்ள முடியவில்லை. இதனால் இன்று நடக்கும் பேரணியில் பிரதமர் கலந்துகொள்ள உள்ளார் என ஐஏஎன்எஸ்(IANS) தெரிவித்துள்ளது.

 

 

இந்த பேரணியில் குறைந்தபட்சம் ஒரு லட்சம் மக்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே பேரணி நடைபெறும் பெங்களூரு அரண்மனை மைதானத்தை சுற்றி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

On behalf of the people of Karnataka, I take this opportunity to welcome Honb'le PM Shri @narendramodi ji to Bengaluru. Looking forward to it!#ModiInBengaluru #ParivartanaYatre pic.twitter.com/Eawf1Z8GJV

— B.S. Yeddyurappa (@BSYBJP) February 4, 2018

 

இளைஞர்களை, தொழில்நுட்ப வல்லுனர்களையும், ஐ.டி. மற்றும் பயோடெக் நிறுவனங்களின் நிர்வாகிகளை கலந்துக் கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. மேலும் பிரதமர் பேசும் பேரணி நிகழ்ச்சியை செய்தி சேனல் தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பப்படும் மற்றும் யூ-டூப் சேனலிலும் நேரலை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பெங்களூரு வரும் பிரதமர் மோடி மகதாயி விவகாரத்தில் உறுதியான முடிவு எடுக்க வலியுறுத்தி கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பெங்களூரு முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் 224 தொகுதிகள் கொண்ட கர்நாடகா சட்டமன்ற தேர்தல் இந்த வருடம் ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெறும் அறிவிக்கப்பட்டுள்ளது.