கர்நாடக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதல்வர் HDK ஆய்வு!

கர்நாடக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் HD குமாரசாமி அவர்கள் வான்வழி ஆய்வு மேற்கொண்டார்!

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 19, 2018, 02:06 PM IST
கர்நாடக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதல்வர் HDK ஆய்வு! title=

கர்நாடக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் HD குமாரசாமி அவர்கள் வான்வழி ஆய்வு மேற்கொண்டார்!

கார்நாடக மாநிலத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக மாநிலத்தின் மங்களூரு, குடகு, மைசூரு, உத்தர் கன்னடா ஆகிய மாவட்ங்களில் சுமார் 1500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வெள்ளத்தில் சிக்கி தவித்து வருகின்றனர்.

ராணுவ வீரர்களின் உதவியுடன் மீட்பு பணி தீவிரமாக நடைப்பெற்று வருகிறது, எனினும் குறைந்த வெளிச்சம் காரணமாகவும், வானிலை மேகமூட்டம் காரணமாகவும் மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. கர்நாடக மாநிலம் குடகில் மட்டும் இதுவரை 8 பேர் மழைக்கு பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பலியானவர்களின் குடும்பத்திற்கு தலா 6 லட்சமும், மழையால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டத்திற்கு ரூ.200 கோடி நிவராண நிதியாகும் முதல்வர் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் இன்று கர்நாட்டக முதல்வர் குமாரசாமி அவர்கள், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடகு மாவட்டதினை வான்வழி மார்கமாக ஆய்வு மேற்கொண்டார்.

948 மீட்பு படை வீரர்களின் உதவியோடு இதுவரை 1250 பேர் மீட்கப்பட்டு 30-க்கும் மேற்பட்ட முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Trending News