கர்நாடக முதல்வர் BS எடியூரப்ப-வில் அலுவலக ஊழியர் ஒருவின் உறவினருக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவியுள்ளத்தை அடுத்து கர்நாடக முதல்வரின் அலுவலகம் கிருமிநாசினிக்காக அடைக்கப்பட்டுள்ளது.
தகவல்கள் படி முதல்வர் அலுவலகத்தில் பணிபுரியும் ஒரு பெண் ஊழியர், கடந்த இரண்டு நாட்களாக பணிக்கு வரவில்லை. மேலும் அவரது கணவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே அவர் பணிக்கு திரும்பவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹுப்பல்லி விமான நிலையத்தில் மீண்டும் விமான சேவைகள்...
இதுகுறித்து முதல்வர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கையில்., "அலுவலகத்தில் பணிபுரியும் பெண்ணுக்கு கொரோனா தொற்று இல்லை, அவரது கணவருக்கே கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முதல்வர் அலவலகம் தற்போது கிருமி நாசினி செய்யப்படுகிறது" என தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து முதல்வர், அன்றைய முக்கியமான அனைத்து கூட்டங்களையும் 'கிருஷ்ணா'வுக்கு பதிலாக விதான சவுதத்தில் நடத்தினார் என்றும் வட்டாரங்கள் தெரிவித்தன.
இதேபோல், பெங்களூரு ரயில்வே பிரிவின் பிரதேச அலுவலகம் வெள்ளிக்கிழமை கிருமிநாசினிக்காக மூடப்பட்டது.
கர்நாடகாவில் ‘இரண்டு நாள் ஊரங்கிற்கு’ இடமில்லை; முதல்வர் எடியூரப்பா உறுதி!...
"SBC தென்மேற்கு ரயில்வேயின் ரயில்வே பிரிவு அலுவலக ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் பெங்களூரு ரயில்வே பிரிவின் பிரதேச அலுவலகம் 19 ஜூன் அன்று கிருமிநாசினிக்காக மூனப்பட்டது." என தென்மேற்கு ரயில்வேயின் ரயில்வே பிரிவு அலுவலகம் இதுதொடர்பான அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.
மேலும் திங்களன்று அலுவலகம் மீண்டும் திறக்கப்படும் என்றும் இந்த அறிவிப்பு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.