கோடியில் புரளும் K'நாடகா: MLA-களின் சராசரி ஆண்டு வருமானம் ரூ.111.4 லட்சம்...!

மாநிலவாரியாக கர்நாடக மாநில MLA-களின் ஆண்டு சராசரி வருமானம் ரூ.1.14 கோடியாக முதலிடத்தில் இருக்கிறது...! 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 18, 2018, 11:22 AM IST
கோடியில் புரளும் K'நாடகா: MLA-களின் சராசரி ஆண்டு வருமானம் ரூ.111.4 லட்சம்...!  title=

கோடியில் புரளும் கர்நாடகா: மாநிலவாரியாக கர்நாடக மாநில MLA-களின் ஆண்டு சராசரி வருமானம் ரூ.1.14 கோடியாக முதலிடத்தில் இருக்கிறது...! 

இந்தியாவில் உள்ள MLA-களின் சராசரி ஆண்டு வருமானம் ₹24.59 லட்சம் என கணக்கிடப்பட்ட நிலையில், கர்நாடகா MLA-களின் வரிவாய் மட்டும் 4 மடங்கு அதிகரித்து ₹1.10 கோடியாக உள்ள தகவல் வெளியாகி உள்ளது. 

நாடு முழுவதும் பதவியில் இருக்கும் 4,086 MLA-க்கள் வேட்புமனுத் தாக்கலின் போது அளித்த பிரமாணப்பத்திரத்தை ஜனநாயகத்துக்கான சீரமைப்பு அமைப்பு எனும் தன்னார்வ அமைப்பு ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், தற்போது பதவியில் இருக்கும் 4,086 எம்எல்ஏக்களின் பிரமாணப்பத்திரங்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. அவற்றில் 941 MLA-க்கள் தங்களின் வருமானத்தை பற்றிய தகவல்களை குறிப்பிடவில்லை. எனவே 3,145 MLA-க்களின் வருமானம் குறித்து ஆய்வு செய்யப்பட்டதில் அவர்களின் ஆண்டு வருமானம் சராசரியாக ரூ.24.59 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது. 

MLA-க்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்கள் அடிப்படையில், திரட்டப்பட்ட புள்ளி விவரங்களை இரு அமைப்புகளும் அறிக்கையாக நேற்று வெளியிட்டன. அதில், MLA-களின் சராசரி ஆண்டு வருமானம் ₹24.59 லட்சமாக உள்ளது. அதே வேளையில் கர்நாடகா MLA-க்கள் வருமானம் ₹1.11 கோடியாகும். நாட்டிலுள்ள MLA-களின் சராசரி வருமானத்தைக் காட்டிலும் இது 4 மடங்கு அதிகம். சட்டீஸ்கர் மாநில MLA-களுக்கு ஆண்டு வருமானம் ₹5.4 லட்சம் என மிகவும் குறைவாக உள்ளது. 

ஜார்க்கண்டின் 72 பேருக்கு தலா ₹7.4 லட்சமாக உள்ளது. தென் மண்டலத்தைச் சேர்ந்த 711 பேரின் சராசரி ₹51.99 லட்சம். மகாராஷ்டிராவில் சராசரியாக ₹43.4 லட்சம் சம்பாதிக்கின்றனர். குறிப்பாக கர்நாடகாவின் 203 MLA-களின் சராசரி வருமானம் ₹1.11 லட்சம். கிழக்கு மண்டலத்தின் 614 பேருக்கு ₹8.53 லட்சம் வருமானமாக உள்ளது. 

தகவல் அளித்தவர்களில் 2 சதவீதத்தினர் (55 பேர்) தங்களது தொழில் குறித்து தகவல் அளிக்கவில்லை. 25 சதவீதத்தினர் வியாபாரம் என்றும், 24 சதவீதத்தினர் விவசாயம் அல்லது விவசாயி எனவும் குறிப்பிட்டு உள்ளனர். பண்ணை சார்ந்த தொழில் என குறிப்பிட்ட 13 சதவீதம் பேரின் சராசரி ₹57.81 லட்சம். ரியல் எஸ்டேட் தொழில் குறிப்பிட்டவர்கள் 1 சதவீதம். ஆனால் வருமானம் ₹39.69 லட்சம் மற்றும் ₹28.48 லட்சம் எனக் கூறியுள்ளனர். கல்வித் தகுதியை பொருத்தமட்டில் 33 சதவீதம் 5 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்துள்ளனர். 

அவர்களது வருமானம் ₹31.03 லட்சம். 63 சதவீதம் பட்டதாரிகள் அல்லது அதைவிட அதிகம் படித்துள்ளனர். ஆனால் வருமானம் ₹20.87 என குறிப்பிட்டு உள்ளனர். 8ம் வகுப்பு வரை படித்துள்ளேன் எனக் கூறியுள்ள 139 பேரின் வருமானம் தலா ₹89.88 லட்சமாக உள்ளது. வயது 25 முதல் 50 என குறிப்பிட்ட 1,402 எம்எல்ஏக்கள் ₹18.25 லட்சமும், 51 முதல் 80 வரையுள்ள 1,727 பேரின் வருமானம் ₹29.32 லட்சமாகவும் உள்ளது. 11 எம்எல்ஏக்களின் வயது 81 முதல் 90 வரை உள்ளது. இவர்கள் சராசரியாக ₹87.71 லட்சம் வருவாய் பார்க்கின்றனர். 90 வயதைக் கடந்த 2 பேர் ₹60.91 லட்சம் ஈட்டுகிறார்கள். 

மொத்த MLA-களில் 258 பேர் பெண்கள். சராசரியாக ஆண் MLA-க்கள் வருமனம் ₹25.85 மற்றும் பெண் MLA-கள் வருமானம் ₹10.53 லட்சமாக உள்ளது என கூறப்பட்டு உள்ளது. பெண் MLA-க்களை விட ஆண் MLA-கள் வருமானம் குறைவாகவே காணப்படுகிறது. 

மாநிலவாரியாக கர்நாடக மாநிலMLA-க்கள் 203 பேரின் ஆண்டு சராசரி வருமானம் ரூ.1.14 கோடியாக முதலிடத்தில் இருக்கிறது. அதைத் தொடர்ந்து மஹாராஷ்டிரா மாநிலத்தின் 203 MLA-க்கள் வருமானம் ரூ.43.40 லட்சமாக இருக்கிறது. குறைந்தபட்சமாக சத்தீஸ்கர் மாநிலத்தின் 63 MLA-க்கள் வருமானம் ரூ.5.40 லட்சம் என தெரிவித்துள்ளது...! 

 

Trending News