பிரதமர் மோடிக்கு தனது அனைத்து நிலங்களையும் கொடுக்க விரும்பும் 85 வயது பெண்மணி

உத்தரபிரதேசத்தின் மெயின்பூரி மாவட்டத்தில் புதன்கிழமை ஒரு ஆச்சர்யமான செய்தி வெளிவந்துள்ளது. இங்கு ஒரு வயதான பெண்மணி தனது நிலங்கள் அனைத்தையும் பிரதமர் நரேந்திர மோடியின் பெயரில் எழுதி வைக்க பதிவு அலுவகத்திற்கு வந்த போது,  அலுவலர்கள் ஆச்சர்யம் அடைந்தனர்.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Dec 3, 2020, 12:55 PM IST
  • ஒரு வயதான பெண்மணி தனது நிலங்கள் அனைத்தையும் பிரதமர் நரேந்திர மோடியின் பெயரில் எழுதி வைக்க பதிவு அலுவகத்திற்கு வந்த போது, அலுவலர்கள் ஆச்சர்யம் அடைந்தனர்.
  • வக்கீல்கள் பல முறை எடுத்து கூறிய பிறகும், பிட்டன் தேவி, அவர்கள் கூறுவதை கேட்கத் தயாராக இல்லை.
பிரதமர் மோடிக்கு தனது அனைத்து நிலங்களையும் கொடுக்க விரும்பும் 85 வயது பெண்மணி title=

உத்தரபிரதேசத்தின் மெயின்பூரி மாவட்டத்தில் புதன்கிழமை ஒரு ஆச்சர்யமான செய்தி வெளிவந்துள்ளது. இங்கு ஒரு வயதான பெண்மணி தனது நிலங்கள் அனைத்தையும் பிரதமர் நரேந்திர மோடியின் பெயரில் எழுதி வைக்க பதிவு அலுவகத்திற்கு வந்த போது,  அலுவலர்கள் ஆச்சர்யம் அடைந்தனர்.

பிரதமர் மோடியின் பெயரில் தனது அனைத்து நிலங்களையும் செய்வேன் என்று அந்த பெண்மணி பிடிவாதமாக உள்ளார். இதற்குப் பின்னால் உள்ள காரணம் உணர்ச்சி பூர்வமானது. 

விகாஸ் கண்டில் உள்ள கிஷ்னி  கிராமத்தில் வசிக்கும் மனைவி புரான் லால், 85 வயதான பிட்டன் தேவி, புதன்கிழமை பிற்பகல் மாவட்டத்தில் உள்ள வழக்கறிஞர் கிருஷ்ணப்பிரதாப் சிங்கிடம் சென்றார். பிரதமர் நரேந்திர மோடியின் (PM Narendra Modi) பெயரில்  தன்னிடம் உள்ள சுமார் 25 ஏக்கர் நிலத்தை கொடுக்க விரும்புவதாக அவர் வழக்கறிஞரிடம் கூறினார்.

மிகவும் வயதான பிட்டன் தேவி சொல்வதை கேட்டு வக்கீல்கள் அதிர்ச்சியடைந்தனர். வக்கீல் அவரை அவ்வாறு செய்ய வேண்டாம் எனக் கூறி அவரை சமாதானப்படுத்த முயன்றார், ஆனால் பிட்டன் தேவி தனது விஷயத்தில் பிடிவாதமாக இருந்தார்.

தனது கணவர் இறந்துவிட்டார் என்று கூறிய பிட்டன் தேவி, அவரது இரண்டு மகன்கள் மற்றும் மருமகள்கள் அவரை கவனித்துக்கொள்வதில்லை. அவர் அரசாங்கம் கொடுக்கும் முதியோர் ஓய்வூதியத்தைப் (Pension) பெற்று வாழ்க்கை நடத்துகிறார். அத்தகைய சூழ்நிலையில், அவர் தனது நிலத்தை பிரதமர் நரேந்திர மோடியின் பெயருக்கு மாற்ற விரும்புகிறார்.

வக்கீல்கள் பல முறை எடுத்து கூறிய பிறகும், பிட்டன் தேவி, அவர்கள் கூறுவதை  கேட்கத் தயாராக இல்லை. இது குறித்து வழக்கறிஞர், துணை மாவட்ட ஆட்சியரிடம் கூறியதாக கூறி, அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

ALSO READ | மேலும் படிக்க | மீனவர் கையில் சிக்கிய புதையல்... திமிங்கிலத்தின் வாந்திக்கு ₹25 கோடியாம்..!!!

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News