கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் கொரோனாவின் கோரதாண்டவம்; மொத்தம் 3 லட்சத்தை தாண்டியது

நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்றின் (Coronavirus) மொத்த எண்ணிக்கை இப்போது 3 லட்சத்தைத் தாண்டியுள்ளன. சனிக்கிழமை காலை நிலவரப்படி, கடைசி 24 மணி நேரத்தில், 11458 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று பதிவாகியுள்ளன.

Written by - Shiva Murugesan | Last Updated : Jun 13, 2020, 10:13 AM IST
  • கடந்த 24 மணி நேரத்தில், 11458 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று.
  • மொத்த எண்ணிக்கை இப்போது 3 லட்சத்தைத் தாண்டியுள்ளன.
  • நாட்டில் முதல் முறையாக ஒரே நாளில் 11 ஆயிரத்தை தாண்டி உள்ளது.
  • கொரோனா நோய்த்தொற்றின் இறப்பு எண்ணிக்கை இதுவரை 8884 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் கொரோனாவின் கோரதாண்டவம்; மொத்தம் 3 லட்சத்தை தாண்டியது title=

கொரோனா தகவல்கள்: நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்றின் (Coronavirus) மொத்த எண்ணிக்கை இப்போது 3 லட்சத்தைத் தாண்டியுள்ளன. சனிக்கிழமை காலை நிலவரப்படி, கடைசி 24 மணி நேரத்தில், 11458 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று பதிவாகியுள்ளன. அதே நேரத்தில் 386 பேர் இறந்துள்ளனர். இதன் பின்னர், நாட்டில் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,08,953 ஆக உயர்ந்துள்ளது. நாட்டில் (Corona in India) கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை ஒரு நாளில் 11 ஆயிரத்தை தாண்டுவது இதுவே முதல் முறை.

இந்த செய்தியும் படிக்கவும் | கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்ட பிறகு பள்ளிகள் திறக்கப்படும்: EPS

கொரோனா நோய்த்தொற்றின் இறப்பு எண்ணிக்கை இதுவரை 8884 ஆக அதிகரித்துள்ளது. நாளுக்கு நாள் புதிய கொரோனா தொற்று பரவி வருவதால், செயலில் உள்ள கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1 லட்சம் 45 ஆயிரம் 779 ஆக அதிகரித்துள்ளது. இருப்பினும், கொரோனாவிலிருந்து இதுவரை 1 லட்சம் 54 ஆயிரம் 330 பேர் குணமாகியுள்ளனர்.

கொரோனா வைரஸ் அதிகரித்து வருவதால், உலக நாடுகளில் அதிகம் பாதித்தவர்களின் பட்டியலில் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது. அதேபோல COVID-19 தொற்று மூலம், இதுவரை இறந்தவர்களின் பட்டியலில் இந்தியா 11 வது இடத்தில் உள்ளது. 

இந்த செய்தியும் படிக்கவும் | Covid-19 அடுத்தக்கட்ட திட்டம் என்ன? PM Modi முதல்வர்களுடன் ஆலோசனை

கொரோனா தொற்று காரணமாக பிரிட்டனில் சுமார் 41,481 பேர் இறந்துள்ளனர், பிரேசிலில் இதுவரை கொரோனா காரணமாக 41,901 பேர் இறந்துள்ளனர். கொரோனாவால் இறந்தவர்களில் பட்டியலில் பிரிட்டனை முந்தி பிரேசில் இரண்டாவது இடத்தை பிடித்தது. அமெரிக்கா தொடர்ந்து முதலில் இடத்தில் உள்ளது. அங்கு 1,16,257 பேர் இதுவரை இறந்துள்ளனர். 

 

இந்தியா முழுவதும் உள்ள கொரோனா வைரஸ் வழக்குகளின் மாநில வாரியான பட்டியல் இங்கே:

 

S. No. Name of State / UT Active Cases* Cured/Discharged/Migrated* Deaths** Total Confirmed cases*
1 Andaman and Nicobar Islands 5 33 0 38
2 Andhra Pradesh 2495 3105 80 5680
3 Arunachal Pradesh 63 4 0 67
4 Assam 1953 1537 8 3498
5 Bihar 2480 3587 36 6103
6 Chandigarh 43 286 5 334
7 Chhattisgarh 873 550 6 1429
8 Dadra and Nagar Haveli and Daman and Diu 28 2 0 30
9 Delhi 22212 13398 1214 36824
10 Goa 394 69 0 463
11 Gujarat 5619 15493 1415 22527
12 Haryana 3789 2475 70 6334
13 Himachal Pradesh 183 297 6 486
14 Jammu and Kashmir 2591 2086 53 4730
15 Jharkhand 937 672 8 1617
16 Karnataka 2997 3440 79 6516
17 Kerala 1303 1000 19 2322
18 Ladakh 176 62 1 239
19 Madhya Pradesh 2802 7201 440 10443
20 Maharashtra 49628 47796 3717 101141
21 Manipur 308 77 0 385
22 Meghalaya 21 22 1 44
23 Mizoram 103 1 0 104
24 Nagaland 107 49 0 156
25 Odisha 1014 2474 10 3498
26 Puducherry 88 67 2 157
27 Punjab 641 2282 63 2986
28 Rajasthan 2898 8898 272 12068
29 Sikkim 61 2 0 63
30 Tamil Nadu 18284 22047 367 40698
31 Telangana 2032 2278 174 4484
32 Tripura 682 278 1 961
33 Uttarakhand 756 947 21 1724
34 Uttar Pradesh 4642 7609 365 12616
35 West Bengal 5587 4206 451 10244
  Cases being reassigned to states 7984     7984
  Total# 145779 154330 8884 308993

இந்தியாவை பொறுத்தவரை மகாராஷ்டிரா மாநிலம் ஒரு லட்சத்தை நெருங்கியுள்ளது. அதற்கு அடுத்த இடத்தில் தமிழ்நாடு (Tamil Nadu) உள்ளது. தமிழகத்தில் 38,716 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது.

Trending News